இஸ்ரேலின் பொய் பிரச்சாரத்தை, அம்பலமாக்கிய டோனி பிளேர்
காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வேறு நாடுகளுக்கு மாற்றும் இஸ்ரேலிய திட்டங்களில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரின் பங்கு பற்றிய இஸ்ரேலிய ஊடகங்களின் அறிக்கைகளை டோனி பிளேர் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் சேஞ்ச் மறுத்துள்ளது
அது பொய் என்று விவரிக்கிறது.
'டோனி பிளேயர் அல்லது அவரது குழுவினருடன் எந்த தொடர்பும் இல்லாமல் கதை வெளியிடப்பட்டது.
அதுபோன்ற எந்த விவாதமும் நடக்கவில்லை. டோனி பிளேயர் அத்தகைய விவாதத்தை நடத்தமாட்டார்இ கொள்கை அடிப்படையில் தவறான யோசனை என டோனி பிளேர் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் சேஞ்ச் மேலும் கூறியது.
முன்னதாக இஸ்ரேலிய தரப்பு காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வேறு நாடுகளுக்கு மாற்றுவதற்கு டோனி பிளேர் ஆதரவளித்ததாக பெரும் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment