Mp ஆகும் பிரபல வர்த்தகர்
தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த சமிந்த விஜேசிறிக்கு அடுத்தபடியாக நயன வாசலதிலக்க பதவியேற்கவுள்ளதாக SJB யின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
சமிந்த விஜேசிறியின் பதவி விலகல் இன்று பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சமிந்த விஜேசிறி இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, தான் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு புதிய ஆணை தேவை என அவர் மேலும் தெரிவித்த அவர், 225 எம்.பி.க்களையும் அவர்களது பிள்ளைகள் உட்பட அனைவரையும் சேர்த்து இந்நாட்டின் பொதுமக்கள் சபிப்பதாகவும், தனது பிள்ளைகள் இத்தகைய மோசமான எண்ணத்திற்கு ஏற்புடையவர்கள் இல்லையெனவும் தெரிவித்தார்.
தாம் SJB யிலிருந்து விலகப் போவதில்லை என தெரிவித்த அவர், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்ததும் SJB இன் கீழ் மீண்டும் அரசியலில் பிரவேசிப்பது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவுடன் தொடர்புடைய பல வர்த்தகங்களைக் கொண்ட வர்த்தகரான நயன வாசலதிலக்க கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும், பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்குத் தேவையான வாக்குகளைப் பெறத் தவறியிருந்தார்.
ஒரு சிறந்த வர்த்தகரான வாசலதிலக்க, கடந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) காலி டைட்டன்ஸ் உரிமையாளராகவும் தனது முத்திரையைப் பதித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment