Header Ads



கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 பில்லியன் ரூபா வரி நிலுவை


 கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 பில்லியன் ரூபா வரி நிலுவையாக உள்ளதாக தெரியவந்துள்ளது. 


இவற்றில் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை, அரச நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டடங்களுக்காக அறவிடப்படவேண்டியுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார். 


இதன் காரணமாக நகர அபிவிருத்திக்காக ஈடுபடுத்தக்கூடிய பாரிய அளவிலான நிதி இழக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 


இந்த நிலையில், தமது வரித் தொகையினை வருடத்தின் முற்பகுதியிலேயே செலுத்தும் நபர்களுக்கு கழிவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.