இறைவரித் திணைக்களத்தின் எச்சரிக்கை - 50, 000 அபராதம் செலுத்துவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுங்கள்
18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வரி எண்களை பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விண்ணப்பத்தை அதன் இணையதளத்தில் சென்று பூர்த்தி செய்து கொள்ளலாம். மதிப்பீட்டு ஆண்டிற்கு 1,200,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வரிக் கோப்பைத் திறக்க வேண்டும். ஒரு வருடத்தின் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரையிலான காலம் மதிப்பீட்டு ஆண்டாகக் கருதப்படுகிறது.
வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதிவு செய்துக்கொள்ளாதவர்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பதிவு செய்யும் எனவும் இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
Post a Comment