Header Ads



வினாத்தாள் கசிந்தமையால் 3 பேர் கம்பி எண்ணுகின்றனர்


நடந்துகொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் விவசாய விஞ்ஞான பரீட்சைக்கான முதலாம் மற்றும் 2ஆம் வினாத்தாள்களை கசிய விடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


அம்பாறை பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி திருமதி நவோமி விக்ரமரத்ன மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


 பரீட்சைக்கு முன்னரே  வினாத்தாள்களை கசியவிட்ட சம்பவம் தொடர்பில்   மொரட்டுவ மகா வித்தியாலய  பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோர் வியாழக்கிழமை (25) கைது செய்யப்பட்டனர். அவர்களையே 2ஆம் திகதிதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மொரட்டுவ மகா வித்தியாலய பரீட்சை மண்டபத்தின் பொறுப்பதிகாரியான    ஆசிரியை தினேஷா விரட்டானி மற்றும் அலுவலக உதவியாளர் சுமுது சிந்தன ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்த பரீட்சை வினாத்தாள்கள் வெளியானமை தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலயத்தின் விவசாய விஞ்ஞான ஆசிரியரும், வௌ்ளிக்கிழமை (26) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவரும் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.