ஜனாதிபதிக்கு முதுகெழும்பு இல்லை, 30 ஆம் திகதி ஆர்ப்பாட்டதை மக்கள் திரளோடு நடத்துவோம்
இந்த முறை பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைத்தது பிரதான இரு காரணங்களை அடிப்படையாகக் கொண்டாகும். தற்போதைய கோப் குழுவின் தலைவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது பலரும் அவருக்கு எதிராக விரல் நீட்டும் போது,அவர் அந்தப் பதவிக்கு பொருத்தமற்றவர் என கூறப்படும் போது, விடநங்கள் வெளிப்படும் போது,கருத்துக்கள் தெரிவிக்கப்படும் போது, ஊடகங்கள் வாயிலாக கருத்துக்கள் வெளிவரும் போது, நான் கோப் குழுவின் உறுப்பினர் என்ற வகையில், எரிவாயு நிறுவனம் 2022 இல் 1.3 பில்லியன் பண விரயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த போது, எரிவாயு நிறுவனத்தை கோப் குழுவின் விசாரணைக்கு அழைக்குமாறு தவிசாளருக்கு இரு முறை நான் கடிதம் எழுதினேன்.
அவர் அவ்வாறு செய்யவில்லை. பின்னர் நான் குறித்த இரு கடிதங்களையும் சபையில் சமர்ப்பித்தேன்.
ஊழல் மோசடிகளை மேற்கொண்ட அரச நிறுவனங்களை கோப் குழுவிற்கு அழைத்தபாடில்லை.ஊழலும் மோசடியும் நடந்த பிற்பாடு பிரயோசனம் இல்லை.நடக்க முன்னர் நடவடிக்கை எடுக்கும் இயலுமை கோப் குழுவிற்கு உண்டு.இதை கோப் தவிசாளர் செய்யவில்லை.அரசாங்கத்திற்கு முதுகெழும்பு இல்லை.மக்களிடமிருந்தும் ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்பு உறுப்பினர்களிடமிருந்தும் தவிசாளருக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியும் அரசாங்கத்தால் இவரை பதவி நீக்க செய்ய முடியாது. பதவி நீக்க முதுகெழும்பு இல்லாததால் கூட்டத்தொடரை ஒத்தி வைத்துள்ளனர்.முது கெழும்பில்லாத அரசாங்கம்.
கூட்டத்தொடரை ஒத்தி வைக்க இரண்டாம் காரணம்;
புன்னியத்தில் கிடைத்த ஜனாதிபதி பதவியை, ஜனாதிபதி அவர்கள் தனது நண்பர்களுடன் இணைந்து ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை பதம் பார்க்கிறார். மறுபுறம் மக்களைச் சுரண்டி வரி விதித்து இரத்தத்தை உறுஞ்சி வருகின்றனர்.எதிர்பார்புகள் இன்றி மக்கள் தமது வாழ்க்கை கடந்து வருகின்றனர்.
இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். உற்பத்திகள் குறைந்து விலைவாசி உச்சம் தொட்டுள்ளன.மக்களை Flate பன்னியுள்ளனர்.பல்வேறு மறைமுக வரிகளை அறவிட்டு வருகின்றனர். 10 இலட்சம் குடும்பங்களின் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பொருட்கள் விற்பனைக்கு கடைகளில் இருந்தாலும் கொள்வனவு செய்ய முடியாத நிலையை மக்கள் எட்டியுள்ளனர்.
சவர்க்காரத்தை இரண்டு துண்டாக பிளந்து பாவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதியால் அடுத்த முறை தேர்தலில் போட்டியிட முடியாது என்பதை அவர் நன்கறிந்து வைத்துள்ளார்.இரண்டு முறை தோற்றார்,வெல்ல முடியாது என இரண்டு முறை தாரை வார்த்தார்,ஐந்தாவது தடவை புன்னியத்தில் கிடைத்தது.
ஜனாதிபதி பதவியின் ருசியை நன்கு ருசிக்க வேண்டும் என்றபடியாலும்,இறுதி அக்ராசன உரையினை நிகழ்த்துவதற்குமே கூட்டத்தொடரை ஒத்தி வைத்தார். 2048 ஆண்டு நாட்டை கட்டியெழுப்போம் என்று கதையை கட்டமைத்து தேசத்திற்கு பொய்யாக உரையாற்றவே தயாராகி வருகிறார்.இவருடைய இந்த கதைகளை பல தடவை நாம் கேட்டிருக்கிறோம்.பதவி பரிபோக முன்னர் மீண்டும் ஒரு முறை அக்கராசாண உரையை நிகழ்த்தவே இந்த பிரயத்தனம்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று -28- நடந்த ஊடக சந்திப்பிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment