Header Ads



இஸ்ரேலில் விவசாயம் புரிந்துவிட்டு இலங்கை திரும்பினால் 2.5 ஏக்கர் காணி


இஸ்ரேலில் விவசாயத்துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்ற இலங்கை இளைஞர்களுக்கு 2.5 ஏக்கர் காணியை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மனுஷ இதனைத் தெரிவித்தார்.


மேலும், 2024 ஆம் ஆண்டு வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களை தொழில் முயற்சியாளர்களாக உயர்த்துவதற்கு பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ஆண்டாக அமையும் என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.


தற்போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு செல்லும் தொழிலாளர்கள் விவசாய அறிவும் அனுபவமும் பெற்று இலங்கைக்கு திரும்பி வருவதால் இலங்கையில் தமது அறிவை பயன்படுத்த முடியும் என பயிர்ச்செய்கைக்காக 2.5 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு காணி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.


விவசாய தொழில் முனைவோராக அவர்களின் பொருளாதார பலத்தை உயர்த்துவதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது.

1 comment:

  1. இலங்கையில் அறவே விவசாயத் தொழிலில் அனுபவமில்லாத இலங்கையர்கள் இஸ்ரவேலில் விவசாயம் செய்துவிட்டு நாடு திரும்பினால் அவர்களுக்கு அரசாங்கம் 2.5 ஏக்கர் அரச நிலத்தைக் குத்தகையாகக் கொடுக்க சாதகமான பேச்சுவார்த்தைகள் நடாத்துவது வரவேற்கத்தக்கது. இஸ்ரவேல் - காஸா யுத்தத்தில், இஸ்ரவேல் நாடு மிகவும் நெருக்கடியில் தவிர்க்கும் போது அங்கு வௌியில் வேலை செய்வதற்கு இலங்கையர்களை அனுப்பிய அரசாங்கம் அவர்களைச் சமாளிப்பதற்கு மற்றொரு உத்தியைக் கையாளுவது போல் தெரிகிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பெட்டியில் திரும்பிவரும் வாய்ப்புகள் அதிகம் என உள்நாட்டு, சர்வதேச அரசியல் கொந்தளிப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுபற்றி அரசாங்கத்துக்கு எந்தக் கரிசனையும் இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.