2024 ஆம் ஆண்டிற்கான மன்னர் ஸல்மானின் விருந்தாளிகள்
ஹஜ் உம்ரா மற்றும் புனித ஸ்தலங்களைத் தரிசிப்பதற்கான மன்னர் ஸல்மான் பின் அப்தில் அஸீஸ் ஆல் ஸஃஊத் அவர்களின் விருந்தாளிகள் திட்டம், சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மிக முக்கியமான ஒரு திட்டமாகும். அத்திட்டத்தின் ஒரு கட்டமாக, 2024 ஆம் ஆண்டு உலகெங்கிலுமுள்ள நாடுகளிலிருந்து 1000 பேரை உம்ரா செய்வதற்காக சவுதி அரேபியாவுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெறுகின்றன,
இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கிழக்கு ஆசியாவின் 14 நாடுகளில் இருந்து, 250 உம்ரா விருந்தாளிகள் கடந்த 04/01/2024 மதீனா வந்தடைந்தனர். மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்வான், மியான்மார், வியட்நாம், லாவோஸ், ஹொங்கொங், ஜப்பான், புரூணை, தாய்லாந்து, தென்கொரியா, கம்போடியா, மன்கோலியா ஆகியவையே அந்த 14 நாடுகளாகும்.
இத்திட்டத்தின் மூலமாக இலங்கையிலிருந்தும் சிலர் பயனடைவார்கள் என்பது உறுதி.
கலாநிதி M H M அஸ்ஹர் (PhD)
Post a Comment