1982 இல் கட்டுநாயக்கவில் கைபற்றப்பட்ட ஹெரோய்ன், 40 வருடங்களில் மாணவர்களின் பொக்கட்டுக்குள் வந்துள்ளது
- Ismathul Rahuman -
கட்டுநாயக்க பிரதேசத்தில் 1982ல் கைபற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப் பொருள் 40 வருடங்களில் பாடசாலை மாணவர்களின் பொக்கட்டிற்குள் வந்துள்ளது. சுற்றுலாத்துறை துறையில் பரிமாறப்பட்ட போதைப் பொருள் தற்போது கிராமங்களிலும் புகுந்துள்ளது என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீர்கொழும்பு எவன்றா ஹோட்டலில் இடம்பெற்ற நீர்கொழும்பு பிராந்திய பிரஜா பொலிஸ் குழுக்களின் உறுப்பினர்களின் கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
நீண்டகாலமாக பொலிஸாருடன் ஒன்றிணைந்து வேலை செய்பவர்கள்தான் இங்கு வந்துள்ளார்கள். தென் மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் இவ்வாறான கூட்டங்களை நடாத்திவிட்டு கம்பஹா மாவட்டத்தில் களனி, கம்பஹாவில் நடாத்திவிட்டு இறுதிக் கூட்டத்தை இங்கே நடாத்துகிறேன்.
இதன் பிரதான நோக்கம் உங்கள் பிரதேசங்களில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும். யுத்தகாலத்திலும் அதன் பின்னரும் நாசகார வேலைகளில் ஈடுபட்டவர்கள் அப்பிரதேசங்களில் வீடுகளை வாடகைக்கு பெற்றே வாழ்ந்துவந்தனர்.
தற்போதும் வீடுகளை வாடகைக்கு வாங்கி தங்கியிருந்து செயல்படுகின்றனர். இது தொடர்பாக அவதாணமாக இருக்க வேண்டும். உங்கள் பிரதேசத்தில் இருப்பவர்கள் யார் என்பதை அப்பிரதேச பொலிஸார் அறிந்திருக்க வேண்டும். அதற்காக பிரஜா பொலிஸ் குழுக்கள் மூலம் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். கட்டுவப்பிட்டி சம்பவத்தின் போது தேவஸ்தானத்திற்கு 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் வீடொன்றை வாடகைக்கு பெற்று அங்கு தங்கியிருந்தே குண்டை வெடிக்கவைத்தனர். அவ்வாறான செயல்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட குழுவாகவே பிரஜா பொலிஸ் குழு செயல்படுகின்றது.
1982 ல் கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து கைபற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப் பொருள் 40 வருடங்களின் பின்னர் பாடசாலை மாணவர்களின் பொக்கட்டுக்குள் வந்துள்ளது. சுற்றுலாத்துறையில் பரிமாறப்பட்ட போதைப்பொருள் இன்று நாட்டிலுள்ள 14 ஆயிரம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் கிராமங்களுக்குள்ளும் புகுந்துள்ளன. நாற்பது வருடங்களாகியும் போதைப்பொருளை ஒழிக்க முடியவில்லை.
70 சத வீதமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விலையும் அதிகாரிக்கப் பட்டுள்ளன. கனவனை கைது செய்தால் மனைவி வியாபாரத்தை தொடங்குகின்றாள். மனைவி கைது செய்யப்படும் போது பிள்ளைகள் விற்கிறார்கள்.
அவர்களின் சொத்துக்கள் அரசுடமையிக்கப்பட்டுள்ளன . 727 மில்லியன் ரூபா பெறுமதியான உடமைகளை பொலிஸார் கைபற்றியுள்ளனர்.
டிசம்பர் 17ல் ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையை போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வரை நிறுத்த மாட்டோம்.
99 வீதமானவர்கள் நல்லவர்கள். ஒரு வீதமே மோசமான செயல்களில் ஈடுபடுகினறனர். இந்த ஒரு வீதத்தினருக்கு முன் மண்டியிட வேண்டிய நிலை. நல்லவர்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இன்னும் மூன்று மாதங்களில் உங்களை சந்திக்க வரும்போது உங்கள் பிரதேசத்தில் போதைப் பொருள் இல்லை என்று நிலமை உறுவாகவேண்டும் என தெரிவித்தார்.
Post a Comment