கேரள பாஜக நிர்வாகி கொலை - 15 முஸ்லிம்களுக்கு மரண தண்டனை
2021 இல் எஸ்டிபிஐ செயலாளராக இருந்த கே.எஸ்.ஷான் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஸ்ரீனிவாசனின் கொலை கருதப்படுகிறது.
கொலை, சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பைச் சேர்ந்த முதல் 8 குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்டிருந்தது. 9 முதல் 12 வரையிலான குற்றவாளிகள் கொலை, குற்றவியல் அத்துமீறலுக்காக குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். மற்ற 3 பேர் சதி மற்றும் கொலைக் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருந்தது.
ஷான் கொலை செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள், அதாவது, 2021 டிசம்பர் 19 அன்று காலை ஆலப்புழா நகராட்சியின் வெள்ளக்கிணற்றில் ஸ்ரீனிவாசன் குற்றவாளிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
“இரண்டு குழந்தைகள், மனைவி மற்றும் தாயின் கண்முன்னே அவர் கொலை செய்யப்பட்டார்'' என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சந்தீப் வச்சஸ்பதி பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நைசம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், சலாம், அப்துல் கலாம், சஃபருதின், மன்ஷத், ஜஸீப் ராஜா, நவாஸ், சமீர், நசீர், ஜாகிர் ஹுசைன், ஷ்ரேனாஸ் அஷ்ரப், ஷாஜி ஆகியோர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள்.
`இந்த தீர்ப்புக்காக நாங்கள் காத்திருந்தோம். இது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நமது சட்ட அமைப்பு மீதான நமது நம்பிக்கையை வலுப்படுத்தும்,'' என்றார்.
“கேரளாவில் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது அசாதாரணமானது அல்ல. இந்த வழக்கு அரிதான வழக்குகளில் மிகவும் அரிதானது என்று நாங்கள் வாதிட்டோம்.” என்று சிறப்பு அரசு வக்கீல் பிரதாப் ஜி படிக்கல் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.
Post a Comment