Header Ads



சோமாலியாவில் 15 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் கடத்தல்


சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.


மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற்பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.


லைபீரிய நாட்டின் கொடி பறந்த MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் சோமாலியாவின் கடற்பகுதியில் நேற்று கடத்தப்பட்டதாகவும், இந்த கப்பலில் 15 இந்தியர்கள் உள்ளனர் என்றும் இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளது.


அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட குழுவினர் ஆயுதங்களுடன் வந்து கப்பலை கடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.


இதனையடுத்து, கடத்தப்பட்ட சரக்குக் கப்பல் இருக்கும் இடத்தை நோக்கி இந்திய கடற்படை விமானம் அனுப்பப்பட்டுள்ளதுடன், கடற்பாதுகாப்புக்கு உதவும் ஐஎன்எஸ் சென்னை என்ற போர்க் கப்பலும் திருப்பிவிடப்பட்டுள்ளது.


இந்திய கடற்படை விமானம், கடத்தப்பட்ட கப்பல் இருக்கும் இடத்தை இன்று அதிகாலை கண்டறிந்து அதனை கண்காணித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலும் நெருங்கிவிட்டதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது.


மேலும், சர்வதேச பங்குதாரர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து இப்பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடற்படை உறுதியாக உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.