கர்ப்பமாக்கினால் ரூ.13 லட்சம்
அந்த வகையில் பீகார் மாநிலத்தில் கர்ப்பம் தரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண்களை கருத்தரிக்க வைக்கும் ஆண்களுக்கு ரூ.13 லட்சம் வரை வழங்குவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் நவாடா பகுதியில் 'பிரக்னண்ட் ஜாப் ஏஜென்சி' என்ற பெயரிலான நிறுவனத்தில் பணி புரிய ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. அதில், இந் நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளும் ஆண்கள், குழந்தை பெற முடியாமல் தவிக்கும் பெண்களை தேர்வு செய்து அவர்களை கர்ப்பமாக்கலாம்.
இதற்காக முதலில் ரூ.799 வைப்புத்தொகை செலுத்தி நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் பெண்களின் புகைப்படங்கள் வழங்கப்படும்.
அவ்வாறு வழங்கப்படும் பெண்களின் அழகை பொறுத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வைப்புத்தொகை செலுத்தினால் அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம். அந்த பெண் கர்ப்பம் அடைந்தால் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு ரூ.13 லட்சம் வரை தொகை வழங்கப்படும்.
அவ்வாறு கர்ப்பமாகாவிட்டாலும் ஆறுதல் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்த சில வாலிபர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணத்தை செலுத்த தொடங்கி உள்ளனர். ஆனால் நாட்கள் பல சென்ற பின்னரும் கடைசி வரை பெண்களின் புகைப்படங்களை அனுப்பவில்லை. அதன் பிறகு தான் சம்பந்தப்பட்ட வாலிபர்களுக்கு தாங்கள் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் பீகார் பொலிஸில் புகார் செய்தனர். அதன் பேரில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து நவாடா பகுதியில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தி மோசடி கும்பலை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.
Post a Comment