11 நாட்களே ஆன சிசு மரணம் - தப்பிச்சென்ற பெற்றோரை கண்டுபிடிக்க உத்தரவு
குருநாகல் போதனா வைத்தியசாலையில் பிரசவித்து 11 நாட்களே ஆன சிசுவை பெற்றோர் கைவிட்டு சென்றுள்ளனர்.
குறித்த பெற்றோரைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு குருநாகல் பதில் நீதவான் சட்டத்தரணி ஜயபிரேமா தென்னகோன் குருநாகல் தலைமையக பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆண் சிசு 11 நாட்களின் பின்னர் உயிரிழந்தது.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிசுவின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர் பதில் நீதவான் பொலிஸாருக்கு உரிய உத்தரவை வழங்கியுள்ளார்.
குறைப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய், குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டு யாருக்கும் தெரிவிக்காமல் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.
இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இறந்த குழந்தையின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோரைக் கண்டுபிடித்து அவர்கள் தொடர்பான டிஎன்ஏ பரிசோதனையை நடத்துமாறு பதில் நீதவான் சட்டத்தரணி தென்னகோன் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், சிசுவின் பெற்றோர் நாட்டை விட்டு தப்பிச் செல்லலாம் என்ற தகவலை கவனத்தில் கொண்ட பதில் நீதவான், அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாதவாறு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment