Header Ads



ஹூதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இலங்கை சேர்ந்தது - 100 பேர் கொண்ட ரோந்துக் கப்பலை அனுப்புகிறது


அமெரிக்கா தலைமையிலான கடல்சார் பணிக்குழுவில் இலங்கையும் இணையவுள்ளது


யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாக்கும் பணிக்குழுவில் இணைவதாக இலங்கை கடற்படை கூறியதாக ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


"அமெரிக்க கடற்படையின் தலைமையிலான ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியனில் நாங்கள் இணைவோம்" என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.


100க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட ரோந்துக் கப்பலை இலங்கை அனுப்ப உள்ளதாக விக்கிரமசூரிய தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.