1000 கோடி ரூபா வழக்கு - மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல கம்மன்பிலவுக்கு அனுமதி
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
உதய கம்மன்பில தனது கலாநிதி பட்டப் படிப்பதற்காக சீனா செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான 1000 கோடி ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குறித்த சம்பவம் தொடர்பில் தற்போதைக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் மேற்படிப்புக்காக சீனா செல்ல இருப்பதாக அவர் விடுத்த கோரிக்கையை அடுத்து உதய கம்மன்பிலவின் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. எனினும் உதய கம்மன்பில மேற்படிப்புக்காக எப்போது செல்லவுள்ளார் என்ற விபரம் தெரியவில்லை
Post a Comment