Header Ads



இந்தியாவின் JN1 எனப்படும் கொரோனா விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்


இந்தியாவின் கேரள மாநிலத்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட 'JN1' எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


தற்போது, ​ 'JN1' வைரஸ் பரவி வருவதால், கேரள மாநிலம் மட்டுமின்றி, சிங்கப்பூரிலும் 'கொவிட் 19' தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


'JN1' என்பது 'கொவிட் 19 ஓமிக்ரான்' வைரஸின் 'BA2.86' துணை வகையை மாற்றுவதன் மூலம் உருவாக்கப்பட்ட மிக வேகமாக பரவும் வைரஸ் வகையாகும்.


குறித்த வைரஸ் திரிபால் 'பயப்படுவது அவசியமற்றது என தெரிவிக்கப்படுகிறது.


மேலும் வைரஸின் தாக்கம் குறித்து மிகஅவதானத்துடன் கவனம் செலுத்துவதுவதோடு முகக்கவசம் அணிவது, சுகாதாரப் பழக்கங்களைப் பேணுவதன் மூலமும் இதனைத் தடுக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.