தென்னாப்பிரிக்காவை பாராட்டும் 57 இஸ்லாமிய நாடுகள்
ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இஸ்ரேலுக்கு எதிராக இனப்படுகொலை வழக்கை தாக்கல் செய்வதற்கான தென்னாப்பிரிக்காவின் முடிவை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வரவேற்றுள்ளது.
57 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஜித்தாவை தளமாகக் கொண்ட OIC, இந்த நடவடிக்கைக்கு விரைவாக பதிலளிக்க ICJ க்கு அழைப்பு விடுத்துள்ளது என்று கத்தார் செய்தி நிறுவனம் (QNA) தெரிவித்துள்ளது.
"ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல், பொதுமக்களை கண்மூடித்தனமாக குறிவைத்து, பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களைக் கொன்று, காயப்படுத்தி, அவர்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்து, அடிப்படைத் தேவைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளைப் பெறுவதைத் தடுக்கிறது மற்றும் கட்டிடங்களை அழிப்பதன் மூலம் இனப்படுகொலை செய்து வருகிறது என்று OIC வலியுறுத்தியது. , மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் மத நிறுவனங்கள்,” என்று QNA ஒரு அறிக்கையில் OIC ஐ மேற்கோளிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள 57 வெட்கம் கெட்ட, மான ரோசம் இழந்த சொரணையற்ற முஸ்லிம் என்ற இனத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள் அவர்களுடைய இனத்தை மற்றொரு ஆக்கிரமிப்பு இனம் படுகொலை செய்தும். குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணித் தாய்மார்களை அழித்தும் மிகத் தௌிவாக இனஅழிப்பை இனவெறியும் மதவெறியும் தலைக்கேரிய ஸியோனிஸ ஆக்கிரமிப்பு இஸ்ரவேல் வெறியன்கள் ஒரு நாளைக்கு 200, 300, 900 என அப்பாவி குழந்தைகள் பெண்களை இஸ்ரவேல் வெறியன் கொன்றொழித்துக் கொண்டிருக்கும் போது வாய்மூடி, மௌனம் காக்கும் இந்த 57 நாடுகளின் ஆட்சியாளர்களான பொன்னை பதவி வெறியன்கள் மௌனம் காக்கும் போது மிகத் தொலைவில் உள்ள முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக இல்லாத மனித நேயம் கொண்ட தென் ஆபிரிக்கா நாடு இஸ்ரவேல் இனவெறியன்களின் அநியாயமான இனவெறிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இஸ்ரவேலைக் கைதிக்கூட்டில் நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த துணிகரமான நாட்டின் வீரதீரச் செயலைப் பாராட்டுவதாக அந்த 57 நாடுகளையும் பிரநிதித்துவப்ப டுத்தும் OIC சொரணையற்ற பொன்னர்கள் கூட்டம் தென் ஆபிரிக்கா வைப் பாராட்டுகின்றார்களாம். இந்த பொன்னையர்கள் கூட்டம் மௌனம் சாதித்து, மானம் ரோசமுள்ள உலக முஸ்லிம்களின் கோபத்தைத் தூண்டாது இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இங்கு ஒரு முஸ்லிம் நாடு வல்லரசாக இல்லாமலிருப்பதன் பாரதூரமான விளைவு தான் இந்த மக்களுக்கு உலகளாவிய ரீதியில் இந்த அவமானமும் கேவலமும் அழிவும் எற்படுவதற்கு பிரதான காரணி. துருக்கியும் ஈரானும் அவர்களுடைய பொருளாதாரத்தை உரிய முறையில் கட்டியெழுப்பி அந்த உலக மட்டத்தில் காணப்படும் பாரிய இடைவௌியை நிரப்ப முன்வருமா என உலகில் வாழும் முஸ்லிம்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.
ReplyDelete