கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக Dr சக்கீலா இஸ்ஸதீன் நியமனம்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த டாக்டர் சக்கீலா இஸ்ஸதீன் கடமையேற்க உள்ளார்.
இவர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையேற்க உள்ள முதலாவது பெண் அதிகாரியாவார். மருத்துவ துறையில் 35 வருட சேவைக் காலத்தை கொண்ட இவர் சாய்ந்தமருதின் முதலாவது பெண் மருத்துவ கலாநிதியும், மருத்துவ நிர்வாகத்துறையில் முதலாவது முஸ்லிம் பெண் நிர்வாக உத்தியோகத்தருமாகும்.
சாய்ந்தமருது முன்னாள் மரண விசாரணை அதிகாரி மர்ஹும் ராசிக் காரியப்பரின் புதல்வியும், ஓய்வுபெற்ற பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் ஏ. இஸ்ஸதீன் அவர்களின் மனைவியும் ஆவார்.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி , கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் நிந்தவூர் தள வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றி நிறுவனம் சார்பான போட்டிகளில் பங்கு பற்றி தேசிய மற்றும் மாகாணத்தில் பல வெற்றிகளைப் பெற்றவர் .
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக கடமை புரிந்த காலத்தில் சுகாதார துறையில் அதிகளவிலான விருதுகளை பெறுவதற்கு காரணமாக அமைந்த இவர் கல்முனை கார்மல் பாத்திமாக் கல்லூரியின் பழைய மாணவியுமாவார்.
Post a Comment