Header Ads



அமைச்சரின் வீட்டிற்குச் சென்று CID யினர் விசாரணை


இலங்கைக்கு தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்திற்குச் சென்று இன்று (26) பிற்பகல் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.


 ரம்புக்வெல்லவுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்றும் ஆஜராகியிருந்தது.


தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை  தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, மேற்படி அமைச்சின் மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் டொக்டர் கபில விக்ரமநாயக்க மற்றும் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. சுகாதரத்துறையை மண்ணாக்கி பெரும்பாலான மருத்துவர்கள் வௌிநாடு செல்ல அடிப்படைக்காரணியாக இருந்த இந்த நபரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்து குறைந்தது 100 வருடங்களாவது கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி வௌிநாடுகளிலும் உள்நாட்டிலும் இந்த நபரின் பெயரில் அல்லது கள்ளத்தனமாக மற்றவர்களின் பெயர்களில் வைப்பிலிட்டுள்ள அனைத்து பொதுச் சொத்துக்களையும் அரசுடைமையாக்கினால் சுகாதாரத்துறையை அதன்மூலம் மேன்படுத்தலாம்.

    ReplyDelete

Powered by Blogger.