ஏறாவூரில் பாரிய தேடுதல் - கஞ்சா, ஐஸ் பொருட்களுடன், பணமும் மீட்பு
- ரீ.எல்.ஜவ்பர்கான் -
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் யுக்திய போதை ஒழிப்பு வாரத்தை யொட்டி இராணுவம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து ஏறாவூர் பிரதேசத்தில் நடாத்திய பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் நாலரை இலட்சம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
போதைப் பொருள் விற்பனை செய்யப்படும் பிரதேசங்கள் என அடையாளம் காணப்பட்ட பல இடங்களில் படையினரும் பொலிசாரும் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு வீடு வீடாக தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மோப்ப நாய் சகிதம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் அமல் ஏ எதிரிமான வின் ஆலோசனை யின் பேரில் காத்தான்குடி ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சில்வா போதை உட்பட பொலிஸ் அதிகாரிகளும் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பங்கெடுத்து இருந்தனர்.
அதிகாலை மூன்று மணி முதல் காலை ஏழு மணி வரை இச்சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment