Header Ads



இஸ்ரேல் - ஹமாஸ் போர், வளைகுடாவையும் தாண்டிய போரா...?


அபூ அம்மார் (மாவனல்லை)


ஒருவார கால யுத்த நிருத்தம் முடிவடைந்த நிலையில் நேற்றைய தினம் (01-12-2023) ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய பயங்கரவாதிகள் காஸா மீதான தாக்குதல்களை தொடர்ந்துள்னர். இது பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. எனினும் இந்த போரின் போது இஸ்ரேல் இழந்த இழப்புக்கள் மற்றும் உள்நாட்டில் நெதன்யாஹவிற்கு ஏற்பட்டுள்ள அரசியல் தோல்வி, சர்வதேசத்தில் இஸ்ரேலிற்கு ஏற்பட்டுள்ள அவமானம், அரசியல் மற்றும் ராஜதந்தி பின்னடைவுகள் என்பன மீண்டும் ஒரு போரை ஏற்படுத்தாது என்றே பலரும் கருதினர்.


இடைக்கால யுத்த நிருத்தத்தின் பின்னர் மீண்டும் காஸா மீதான போரை இஸ்ரேல் வழுக்கட்டாயமாக தொடர்வதற்கு மேற்சொன்ன காரணங்களே பிரதானமானவை என்பது தான் உண்மை. ஷிமொன் பெரஸ் தவிர்ந்த இஸ்ரேலின் அனைத்து தலைவர்களும் யுத்தவெறி கொண்டவர்களாகவும், பழிவாங்கும் குணம் கொண்டவர்களாகவுமே இருந்துள்ளனர். பல தடவைகள் ஆட்சிபீடமேறி, ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பதவியிழந்து மீண்டும் ஆட்சிபீடமேறிய நெதன்யாவும் அவர் சார்ந்த அரசும் இதில் தீவிர போக்குடையவர்களே.


கடந்த ஒக்டோபர் 07ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தம் இஸ்ரேல் ஹமாஸ் யுத்தமாகவே பார்க்கப்பட்டது. உண்மையும் அதுவே. எனினும் இது இஸ்ரேல் பாலஸ்தீன்,  இஸ்ரேல் ஹாமாஸ் என்ற எல்லையையும் தாண்டி இது இஸ்ரேல் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான மத்திய கிழக்கையும் தாண்டிய ஒரு யுத்தமாகவே பார்க்க வேண்டியுள்ளது.


துரதிர்ஷ்டவசமாக அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் இந்த பிண்ணனியில் பார்க்காவிட்டாலும்,  இஸ்ரேலும் இஸ்ரேலின் நட்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த பிண்ணனியிலே இந்த யுத்தத்தை பார்த்தன என்பது தான் உண்மை.


யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலின் அத்துமீறல்களையும், மிருகத்தனமாக தாக்குதல்களையும் கண்மூடி வரவேற்றன. அத்தோடு நின்றுவிடாமல் இந்த யுத்தத்தை இஸ்ரேல் எவ்வாரும் முன்னெடுக்கலாம் என்றும் அதற்கான பூரண உரிமை இஸ்ரேலுக்கு உண்டு என்றும், இஸ்ரேலின் எந்த நடவடிக்கைகளையும் தாம் கண்டுகொள்ளப்போவதில்லை என்றும், தொடர்ந்து இஸ்ரேலுக்கு பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை வழங்க தயாராயிருப்பதாகவும் அறிவித்தன. எனவே தான் இஸ்ரேலுக்கும் அதன் நட்பு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நிரந்தர யுத்த நிறுத்தமொன்று தற்போதைக்கு அவசியமானதாக இல்லை என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கிறது.


இந்த யுத்தம் தொடர்வதற்கும் இஸ்ரேலின் இந்த அநியாய அக்கிரமங்களை நியாயப்படுத்துவதற்கும் அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளரின் (இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர்) பங்களிப்பு பாரியதாகும். இவரை அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் என்பதை விடவும், சர்வதேச யூத ஒருங்கிணைப்பு செயலாளர் என்பதே பொருத்தம். யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் பல தடவைகள் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டு தனதும் இஸ்ரேலின் நட்பு நாடுகளினதும் நிலைப்பாட்டையும், இஸ்ரேலுக்கான ஆதரவையும் தெரிவித்து இஸ்ரேலை உசுப்பேத்திவிடும் செயலை கனகச்சிதமாக செய்து வந்துள்ளார். இஸ்ரேலுக்கான இவரது கடைசி விஜயத்தின் பின்னரே இஸ்ரேல் மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


நேற்றைய தினம் ஆரம்பிக்கப்ட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை இஸ்ரேல் மிக மோசமான வான் தாக்குதல்களை காஸா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றது.


வழமையான, இஸ்ரேலைக் கண்டிக்கும் கண்துடைப்பும், தாக்குதல்களின் எண்ணிக்கையையும், இழப்புக்களின் எண்ணிக்கையையும் அடுத்தடுத்து சுடச்சுட செய்திகள் என தகவல்களை தரமிறக்கிக் கொண்டிருப்பதற்கும் பலரும் சர்வதேச ஊடகங்கள் முன்னால் அமர்ந்து கொள்வார்கள். இதில் ஒருசிலர் ஹமாஸை விமர்சிக்கவும் தயங்கமாட்டர்.


நான் ஆரம்பத்தில் கூறியது போன்று இந்த யுத்தம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட ஒரு தனிநபரான இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாவிற்கு இது மிகவும் முக்கியம். தற்போது ஆட்டம் கண்டுள்ள நெதன்யாவின் ஆட்சி, இந்த யுத்தம் இஸ்ரேலுக்கான தோல்வியாக அமையும் என்றிருந்தால் சர்வதேச பிடியானையில் இருந்து நெதன்யா தப்பினாலும் உள்நாட்டில் இருந்து தப்ப முடியாத ஒரு நிலையை உருவாக்கும்.


கடந்த ஐம்பது நாட்கள் நடைபெற்ற யுத்தத்தில் இஸ்ரேலிய ராணுவத்திற்கு பாரிய இழப்புக்களும், இஸ்ரேலிற்கு ஏற்பட்டு பொருளாதார மற்றும் பௌதிக இழப்புக்களும் எழுபத்தைந்து வருட வரலாற்றில் ஏற்படாத இழப்பாகும். இதனை ஈடு செய்ய நெதன்யா அரசு பாரிய வெற்றியொன்றை பெற்றுக் கொடுத்தாக வேண்டும்.


யுத்தமொன்றால் ஹமாஸை வெற்றி கொள்வது அவ்வளவு எளிதானதொன்றல்ல என்பதை நன்குணர்ந்துள்ள இஸ்ரேலிய அரசு, தமக்கு ஹமாஸின் தலைவர்களை கொள்வதே பிரதான இலக்கு என தற்போது கூறிவருகின்றது. மேலும் தமது உலவாளிகள் மூலம் பாலஸ்தீனிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஹமாஸ் தலைவர்களை கொள்வதற்கான வியூகங்களை வகுத்துள்ளதாக அறிவித்துள்ளது.


 மேலும் காஸாவை கைப்பற்றுகின்ற எண்ணம் தமக்கில்லை என்பதும் ஹமாஸ் இல்லாத (பொம்மை) ஆட்சியை  உருவாக்கி காஸா மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்குவதே தனது நோக்கம்!! என தெரிவித்திருப்பதிலிருந்தும் இவை நன்கு புலனாகின்றன.



யுத்த ரீதியாக ஹமாஸை தோற்கடிக்க முடியாதென்பதை நன்கறிந்த யூத நரிகள், தங்களது வழயான சிந்தனா ரீதியான போராட்டத்தை காஸா மக்களுக்குள் நடத்தி வருகின்றனர். நாங்கள் பாலஸ்தீனர்களின் எதிரிகளல்ல. ஹமாஸே உங்களை போருக்கள் திணித்திருக்கிறது. நாம் பாலஸ்தீனர்களை ஆதரித்தே வந்துள்ளோம். பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலில் தொழில் வாய்ப்புக்களை நாம் அளிக்கவில்லையா!


“உங்களது நிம்மதியான வாழ்வு உங்களது கைகளிலே இருக்கின்றது. அதற்காக ஹமாஸ் உறுப்பினர்களையும், அவர்களது முகாம்களையும் எங்களுக்கு அடையாளம் காட்டினால் உங்களுக்கு பல லட்சம் டொலர் பெருமதியான வெகுமதிகளைத் தருகின்றோம். மேலும் உங்களது இரகசியங்களையும், உங்களையும் பாதுகாக்கின்ற பொறுப்பை நாம் ஏற்கின்றோம்” என்பன போன்ற ஆசை வார்த்தைகளும் வாக்குறுதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.


இஸ்ரேலையும், யூதர்களையும் நன்கே அறிந்துள்ள பாலஸ்தீனியர்கள் குறிப்பாக காஸா மக்களிடம் இவர்களது எந்த பித்தலாட்டங்களும் சரிவரவில்லை. சுதந்திர பாலஸ்தீனுக்காக பலரையும் நம்பி ஏமார்ந்த பாலஸ்தீனர்களுக்கு தற்போதைக்கு இருக்கின்ற ஒரேயொரு போராட்க்குழு ஹமாஸ{ம் அவர்கள் சார்ந்த அமைப்புக்களுமே. அதனால் தான் இத்தனை இழப்புக்கள் வந்த போதும் ஹமாஸைக் காட்டிக்கொடுக்கவோ, ஹமாஸிற்கெதிராக செயல்படுகின்றவர்களையோ காண்பது அரிதாக இருக்கின்றது.



கத்தாரின் மத்தியஸதத்துடன் போர் நிறுத்தமமொன்றை இரு தரப்பு செய்து கொண்டாலும், இஸ்ரேலின் தோல்வியை மறைக்கவும், இனியும் தொடர்ந்து போராட முடியாதென்ற நிலையில் உள்ள இராணுவ வீரர்களை திருப்த்திபடுத்தவும், அவர்களுக்கு புதுத்தென்பை வழங்கவுமே இதனை இஸ்ரேல் பயண்படுத்தியது.


மேலும் கைதிகள் பரிமாற்றமும் இஸ்ரேலுக்கு பெருத்த அவமானத்தையும், தோல்வியையும் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ஏற்படுத்தியுள்ளது. விடுதலையான இஸ்ரேல் கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலைபெற்ற பாலஸ்தீன கைதிகளும் நடத்தப்பட்டவிதம் குறித்து இஸ்ரேலின் மனிதாபமற்ற நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் கண்கூடாக பார்த்தது.


 


மேலும் இதுவரை தென்யாவிற்கெதிராக மட்டும் உள்நாட்டில் இருந்த எதிர்ப்பு தற்போது இஸ்ரேலின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளுக் கெதிராகவும் பரிணாமம் அடைந்துள்ளது. இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பு, மிலேச்சத்தனமான படுகொலைகள், மனிதாபிமானமற்ற செயல்பாடுகள் என ஒட்டுமொத்த இஸ்ரேலின் நடவடிக்கைகளும் நடுநிலையான பெரும்பாலான இஸ்ரேலர்களால் விமர்சிக்கப்பட்டுக் கொண்டும், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் காரணமாக அமைந்துள்ளது.


இஸ்ரேலியர்களது வீடுகளில் பாலஸ்தீன கொடி பரக்கவிடப்பட்டிருப்பதும், பாலஸ்தீனர்களின் போராட்டம் நியாயமானது என கூறுகின்ற நிலமையும், சுதந்திர பாலஸ்தீனம் மிக விரைவாக உருவாக்கப்பட வேண்டுமென்ற கோஷமும் வலுபெற்றுவருவதும், இத்தனை இழப்புக்களுக்கு மத்தியில் பாலஸ்தீனர்களது பொறுமையும், ஆழ்ந்த இறைவிசுவாசமும் இஸ்ரேலிய அரசிற்கு எதிர்பாராத தலையிடியாக மாறியுள்ளது.


மீண்டும் தொடரப்பட்டுள்ள இப்போர் காஸாவின் பெயரைப் பயண்படுத்தியதாக இருந்தாலும், முழு மத்திய கிழக்கையும், ஏனைய அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளையும் மையப்படுத்தியதாக அமையப்பபோவது நிச்சியம். குறிப்பாக இதன் போது ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஏதோவொரு வகையான போர் சூழலுக்கு தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. 


அவ்வாரு தள்ளி மத்திய கிழக்கை சுடுகாடாக்கி அமைதியற்ற பிரதேசமாக எப்போதும் வைத்திருக்க வேண்டும். இஸ்ரேலின் கை ஓங்கி இருக்கவும் வேண்டும். எனவே இஸ்ரேலுக்கு சவாலாக இருக்கும் அனைத்து நாடுகளையும் இந்த சந்தர்ப்பத்தை பயண்படுத்தி ஒரு கை பார்க்கவும், அகன்ற இஸ்ரேலிய கனவை நனவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே இஸ்ரேலின் நட்பு நாடுகளின் குறிக்கோலாகும்.


இஸ்ரேலினதும் அதன் நட்பு நாடுகளினதும் இந்த திட்டத்தை அரபு நாடுகளும் நன்கே புரிந்து வைத்துத் தான் இருக்கின்றன. பாலஸ்தீன் கடந்த ஜோர்தான், மொரோக்கோ, சவுதி அரேபியாவின் தபூக், தாயிப், கைபர் பகுதி, மதீனாவின் சில பகுதிகள், சிரியாவின் சில பகுதிகள் என்ற அகன்ற பாலஸ்தீனத்தின் திட்டத்தை அடையவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன.


எனினும் இந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள இஸ்ரேல் தன்னை வளர்த்துக் கொண்டது போல் இதனை அடையவிடாமல் தடுப்பதற்கான எந்த முன்னேற்பாடான திட்டங்களோ, கொள்கைகளோ அரபு நாடுகளிடம் இருப்பதாக தெரியவில்லை.


ஏகிப்திய ஜனாதிபதி சீசி “ஹமாஸ் இருப்பதும் சுதந்திர பாலஸ்தீனுக்காக போராடுவதும் இன்றியமையாதது” என்ற கூறியிருப்பதனூடாக, இஸ்ரேல் தனது காலத்தை பாலஸ்தீன ஹமாஸ{டன் போரிட்டு கடத்த வேண்டும். இதனால் அகன்ற இஸ்ரேல் என்ற கனவு எளிதில் எட்டிவிடக் கூடாது என்பதே அவரது பேச்சின் அர்த்தமென பலரும் கருதுகின்றனர்.


ஜோர்தான், மொரோக்கோ போன்ற நாடுகளைப் பொறுத்தவரையில் தாங்கள் இஸ்ரேலை அங்கீகரித்து அவர்களுடன் நட்பும் வேண்டாம் பகையும் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து விடுவோம் என்ற போக்கில் இருக்கின்றன.


சிரியாவும், எங்களது கோலான் குன்றுகளை பறித்துக் கொண்டதோடு நின்றுவிடுங்கள். உங்களோடு எந்த வம்புக்கும் நாம் இனி வரப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது. அதனால் தான், இஸ்ரேல் ஹமாஸ் போர் ஆரம்பித்த முதல் நாளே, சிரியாவின் விமான நிலைய ஓடுபாதைகளை இஸ்ரேலிய விமானங்கள் குண்டு போட்டு அழித்துவிட்டு வந்த பின்னரும் அமைதி காத்தது சிரியா.


சவுதியைப் பொறுத்தளவில், இஸ்ரேல் நம்ப முடியாத ஒரு நாடு என்பதோடு, இஸ்ரேலின் சகவாசம் இன்றைய காலப்பொழுதில் இன்றியமையாதது என நம்புகின்றது. எனவே இஸ்ரேலோடு எல்லாவித ராஜதந்திர முன்னெடுப்புக்களையும் செய்துவருகின்றது. இதனால் சவுதி பலரது விமர்சனங்களுக்கும் ஆளாகிவருவதை அவதானிக்க முடிகிறது.


இவைகளை மிகச் சரியாக எடைபோட்டுள்ள இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளும் குறிப்பாக அமெரிக்காவும் இஸ்ரேல் ஹமாஸ் போரை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கிறது. ஏனென்றால் இந்த போரில் இஸ்ரேல் பற்றி உலக நாடுகள் குறிப்பாக வளைகுடா நாடுகள் கொண்டிருந்த பயம் இன்று காற்றில் பறக்கவிடப்பற்றிருக்கிறது. இரும்புத் திரை பற்றி அதிகம் பீற்றிக் கொண்டிருந்த இஸ்ரேலின் கட்டுப்பாட்டு அரை ஹக் செய்யப்பட்டு செயலிழக்கப்பட்டது. நவீன போர் ஆயுதங்கள், கவச வாகனங்கள் என எல்லாம் ஹமாஸ் போராளிகள் முன்னால் டப்பா கூறாக மாறின.


பெருத்த அவமானத்திலும், தோல்வியிலும் இருக்கும் இஸ்ரேலுக்கு இந்த யுத்தம் மிக முக்கியமானதாகும். எந்த விலை கொடுத்தும் இதனை வெற்றிகொண்டேயாக வேண்டும் என்ற வைராக்கியமே ஒருவார அமைதிக்கு பின்னரான வலுக்கட்டாய யுத்தத்தின் நோக்கமாகும்.


வியட்னாம், ஈராக், ஆப்கானிஸ்தான் என பல இடங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அடிவாங்கிய அமெரிக்காவிற்கு தனது நவீன ஆயுதங்களை பரிசோதிப்பதற்கும், அவற்றிற்கான உலக சந்தையை பெற்றுக் கொள்ளவும் இந்த போரும் இஸ்ரேலுக்கான இதன் வெற்றியும் இன்றியமையாததாகும்.


இங்கு வெள்ளப் போவது யாராக இருந்தாலும் இந்தப் போரின் ஒவ்வொரு முன்னெடுப்பும் மத்திய கிழக்கிழக்கினதும், இஸ்ரேலினதும் எதிர்காலத்தை மையப்படுத்தியதாகவே இருக்கப் போகிறது.

No comments

Powered by Blogger.