Header Ads



ரணிலை லிபரல்வாதியாக காட்டி, உலக நாடுகளில் நிதி உதவிகளை பெற்றுக்கொடுக்க நாடகம்.


உலக தமிழ் பேரவையின் ஒரு முகமூடி  சுமந்திரன், சம்மந்தன் இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று புதைத்து எதிர்காலத்தை இல்லாமல் செய்வதும் 13 ஆவது திருத்த சட்டத்தை நடை முறைப்படுத்த கோருவதும் இலங்கை அரசை ஒரு நியாயமான அரசாக காட்டுவது மட்டும் தான் இவர்களது நோக்கம் எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசய மக்கள் முன்னணி கட்சி செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.  


கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் பரபரப்பாக போய்கோண்டிருக்கும் விடையம் இந்த உலகத்தமிழர்களுடைய நாடகம் இந்திய மேற்கு நாடுகளின் கூட்டாக இயக்குநர்களாக இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மறைமுகமாக பாத்திரத்தை ஏற்று ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்குகின்றதுடன் ரணில் விக்கிரம சிங்கவை தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்க கூடிய ஒரு லிபரர் வாதியாக காட்டி உலக நாடுகளில் இருந்து ரணிலுக்கு தேவைப்படுகின்ற நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு ஏமாற்று நாடகமாகும்.


இந்த உலகத்தமிழ் பேரவையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் கடந்த 14 வருடங்களில் குறைந்தது 12 வருடங்கள் ஒன்றாக ஜ.நா மனித உரிமைகள் பேரவையிலும் மற்றும் பல இராஜதந்திர மட்டங்களுக்கும் சென்று தமிழ் மக்களின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கும் பல காரியங்களை செய்து இருக்கின்றனர்.


குறிப்பாக சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக முடக்குகின்ற சுமந்திரனது செயற்பாடுகளுக்கு இந்த உலக தழிழர் பேரவை முழுமையாக பக்கபலமாக இருக்கின்றது.


அதேபோன்று 2015 ஆம் ஆண்டிலே ரணில் மைத்திரியோடு இணைந்திருந்தபோது அவர்களுடன் இணைந்து ஒற்றையாட்சிக்குள் 'ஏக்கராஜ்சிய' என்ற ஆட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குகின்ற முழு சதிமுயற்சிகளுக்கும் சுமந்திரனுடன் ஒன்றாக சேர்ந்து பயணித்தவர்கள்தான் இவர்கள்.


ஒருபுறம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி தமிழர்களுடைய பிரச்சனையை தீர்ப்பார்கள் என சர்வதேசத்திற்கு ஏற்படுத்தி நிதிகளை பெற்றுக் கொடுப்பதை செய்து கொண்டு மறுபுறம் தமிழ் தேசிய உணர்வுடன் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என ஒற்றையாட்சியை புறக்கனித்து சமஸ்டி தீர்வு தேவை என்கின்ற தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கோபத்தை தணிப்பதற்காக நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் ரணிலை விமர்சிக்கின்ற பாத்திரத்தை ஏற்று மிகச் சிறப்பாக் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்த சந்தர்பத்தில் உலகத்தமிழர் பேரவையுடன் தாங்கள் ஒன்றாக இருந்து செயற்படுவதை காட்டிக் கொள்ளாமல் அவர்கள் தன்பாட்டில் வந்தது போலவும் அவர்களை தாங்கள் சந்தித்து அதற்கு ஆதரவு தெரிவிப்பது போல மூன்று நான்கு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கின்ற பன்முக நாடகங்களில் ஒன்று தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கை இவர்களது சதிகள் துரோகங்கள் எல்லாம் இன்று அம்பலமாகி முழுமையாக நிராகரிக்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது.


எனவே உலகத்தமிழர் பேரவையின் ஆரம்ப கோரிக்கையே தமிழர்களை குழிதோண்டி புதைப்பதாகும் அதனை அடியோடு நிராகரிக்கின்றோம். புலம் பெயர்ந்த மக்கள் இந்த உலகத்தமிழ் பேரவையின் துரோகங்கள் சதிகளை வெளிப்படுத்த வேண்டும் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என தெரிவித்தார். 


-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

No comments

Powered by Blogger.