Header Ads



அடிவாங்கிய ராஜாங்க அமைச்சரின் வாகனம்


இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, வாகனத்தில் பயணித்தவர்கள் இராஜாங்க அமைச்சரின் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தங்கொடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றச் சென்ற வேளையில் மாரவில மொதரவெல்ல தேவாலயத்திற்கு முன்பாக வாங்குவ பிரதேசத்தில் இன்று (29) இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த தாக்குதல் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அமைச்சரின் சொகுசு ஜீப் மற்றைய காரை சேதப்படுத்தியதாகவும் அதில் பயணித்த கோடீஸ்வர தொழிலதிபர் தனது வாகனத்திற்கு   ஏற்பட்ட சேதத்தை பார்த்து கடும் ஆத்திரமடைந்து இரும்பினால் தாக்கியதாக கூறுகிறார்.


No comments

Powered by Blogger.