Header Ads



வீரவன்சவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்


பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகிய பிணையாளர்களை நாளை (13) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்ப கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.


விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக பிரதிவாதி சமர்பித்த ஆரம்ப ஆட்சேபனைகள் மீதான உத்தரவு இன்று (12) பிறப்பிக்கப்படவிருந்தது.


அப்போது, ​​பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த போது, ​​தமது கட்சிக்காரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை 9 மணியளவில் தனக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.


அத்துடன், விமல் வீரவன்சவின் பிணையாளர்கள் நீதிமன்றில் ஆஜராகாதமை தொடர்பில் அவதானம் செலுத்திய நீதிபதி, அவரது உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விமல் வீரவன்ச சுமார் 75 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்தாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.