Header Ads



ஷிஹானா...


முற்கால அரேபியர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, ஷிஹானா என பெயர் வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். 


அதன்படிதான் நாமும் எமது பெண் குழந்தைகளுக்கு இப்பெயரை சூட்டுவது வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். 


சரி, பெருஞ்சிறப்பையும் பேரழகையும் எடுத்துக்காட்டும் இந்த ஷிஹானா என்ற பெயருக்கு என்ன அர்த்தம்!!!


ஷீஹானா(شيهانة - شاهين) என்பது இந்த பூமிப் பரப்பிலேயே அதிவேகமாக, அதாவது மணிக்கு 400 கி.மீ வேகத்தில் வானுயர பறக்கும் பறவை இனமான பெண் பருந்தின் பெயராகும். 


அரேபியர்கள் பெருமிதத்தோடு, இப்பெயரை தங்கள் பெண் குழந்தைகளுக்கு சூட்டுவார்கள். கவிஞர்கள் தங்கள் காதல் பாடல்களில் பேரழகின் சின்னமாக இதனை எடுத்துக்காட்டுவார்கள். 


இது பின்வரும் தனிச் சிறப்புக்களை தன்னகத்தில் கொண்டதாகும். 


🦇 பேரழகு : 


கண்ணழகும் கட்டழகும் கொண்ட பெண்களுக்கு இப்பெயர் அடைமொழியாக வைக்கப்பட்டு வந்தது. 


🦇 உயர்ச்சி மேன்மை: 


இது வானுயர பறப்பதில் பிரசித்திபெற்றது.  பட்டினியால் செத்தாலும் அழுகிய பிணத்தை இது உண்ணாது. 


🦅 வீரம், பேராண்மை: 


இது இதனை விட, பெறிய இடைகொண்ட நரிகள், ஹுபர் பரவைகள் மற்றும் அதன் கூடுகளை அச்சுறுத்தும் வேட்டைப் பறவைகளைக் கூட லாவகமாக எதிர்க்கவல்லது. 


🦅 தன்மானம் கெளரவம்: 


இதனை முரட்டுத்தனத்தால் வசப்படுத்த முடியாது. மாறாக மதிப்பும், மரியாதையும்  கொடுக்கப்படும் போதே கட்டுப்பாட்டுக்குள் வரும். 


🦇 விலைமதிக்க முடியாது பெரும் சொத்தாக கருதப்படுகிறது. 


பெருமைக்கும் பேராண்மைக்குமான சின்னமாக கருதப்படுவதால் அரேபிய இளவரசர்கள், செல்வந்தர்கள் மற்றும் கோத்திர பிரமுகர்கள் போன்றோர்கள் இதனை சொந்தப்படுத்தி வளர்த்து வருவார்கள். 


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.