Header Ads



மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படவுள்ள விசேட நடவடிக்கை


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


புதிய பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் கீழ் நாளை(17) முதல் விசேட போதை ஒழிப்பு வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படுவதாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர்  அமல் ஏ. எதிரிமான தெரிவித்தார்.


இன்று மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர்  பணிமனையில் இடம்பெற்ற விஷேட உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான மாநாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 போலிஸ் நிலையங்களையும்  சேர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் போதை ஒழிப்பு பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பகாரிகள் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர்


நாளை 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இம்மாவட்டத்தில் விசேட போதை ஒழிப்பு சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மற்றும் தேடுதல்கள் என்பன இடம்பெற இருக்கின்றன. இதற்கென புதியதொரு தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஹெரோயின், ஐஸ்,கஞ்சா உட்பட போதை பொருள் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளை குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிசாருக்கு அறிய தருகின்ற போது தொடர்பை ஏற்படுத்துகின்றவருடைய தொலைபேசி இலக்கம் பொலிசாருக்கு தெரியாத வண்ணம்  unknown என்கின்ற முறைப்படி புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது ரகசியம் பேணப்படுவதற்காகவும் தொடர்பு ஏற்படுத்துகின்றவர்களுடைய தகவல்களை பொலிசார் அறிந்து கொள்ளாதிருப்மதற்காகவும்  இவ்வாறு ரகசிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.