Header Ads



வட் வரி சட்டமூலம் நிறைவேற்றம் -பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு


பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் விவாதமின்றி நிறைவேறியது.


பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.


பிரேரணைக்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.


2


அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் உணவு விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.


மீண்டும் ஒருமுறை உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை உயர்த்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


முட்டை, இறைச்சி, மீன், சீனி மற்றும் கீரி சம்பா அரிசி போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக உணவுகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக சுட்டிகாட்டியுள்ளார்.


எவ்வாறாயினும், உணவு விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.