Header Ads



எதிர்காலம் மிகவும் ஆபத்தானது


எதிர்காலம் மிகவும் ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


இலங்கை நாடு என்ற ரீதியில் படுபயங்கரமான நிலையில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளினால் எதிர்காலத்தில் பெரும் சவால்களை நாடு எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எனவே அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கடினமான பாதையில் செல்வதற்கு அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.


அவ்வாறின்றி பழைய பாதையிலேயே பயணித்தால் நாடு துரதிஸ்டவசமான நிலைக்கு செல்வதனை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தனிப்பட்ட ரீதியில் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் எந்தவொரு நிமிடத்திலும் அமெரிக்காவிற்கு சென்று குடியேற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


நாட்டின் அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை வெற்றிகொள்ள முயற்சிக்க வேண்டுமென கூறியுள்ளார்.    

No comments

Powered by Blogger.