Header Ads



அவுஸ்திரேலியா சென்ற, பாகிஸ்தான் அணிக்கு நேர்ந்த பரிதாபம்


இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் ஏமாற்றமான தோல்விகளை சந்தித்து நாடு திரும்பியது. தோல்விகளுக்கு பொறுப்பேற்று கெப்டன் பாபர் அசாம் தம்முடைய பதவியை இராஜினாமா செய்த நிலையில் ஜாம்பவான் இன்சமாம்-உல்-ஹக் தம்முடைய தேர்வுக்குழு தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்.


இதைத் தொடர்ந்து புதிய டெஸ்ட் கெப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஷான் மசூட் தலைமையில்அ வுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.


அதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற பாகிஸ்தான் அணியினருக்கு விமான நிலையத்தில் அவுஸ்திரேலிய சார்பில் பெரியளவு வரவேற்பு கொடுக்கவில்லை. விமான நிலையத்திற்கு வந்த பாகிஸ்தான் அணியினர் அங்கிருந்து ஹோட்டல் அறைக்கு செல்லும் போது அவர்களின் உடைமைகளை எடுத்து வைக்க அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சார்பில் எந்த ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை. அதன் காரணமாக பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் தங்களுடைய உடைமைகளை கன்டெய்னர் லொரியில் இருந்து தாங்களே ஊழியர்களைப் போல எடுத்துக் கொண்டு சென்றனர்.


2023 உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய அவுஸ்திரேலிய வீரர்களுக்கு அந்நாட்டவர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை என்பதால் பாகிஸ்தான் வீரர்களுக்கு வரவேற்பு கிடைக்காததில் ஆச்சரியமில்லை என்றே சொல்லலாம்.


இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 14 ஆம் திகதி தொடங்குகிறது.

1 comment:

Powered by Blogger.