Header Ads



அதிக விலைக்கு ஏலம் போன பேட் கம்மின்ஸ்


10 அணிகளுக்கிடையிலான 17-வது ஐ.பி.எல் போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில் புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாக அரங்கில் இன்று (19)  நடைபெற்று வருகிறது.


இந்தநிலையில், ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ்சை தங்கள் அணிக்கு எடுக்க பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.


ஆரம்பத்தில் மும்பை அணி கோதாவில் இருந்தது. எனினும், ரூ.10 கோடியை தாண்டியதும் மும்பை விலகிக் கொண்டது.


ஆனால், ஐதராபாத் அணிக்கும் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் கடுமையான  ஏலவிவாதம் ஏற்பட்ட நிலையில்  தொகை உயந்துக்கொண்டே சென்றது இந்நிலையில் ரூ.20.50 கோடிக்கு வந்த பிறகு பெங்களூர் அணி விட்டுக் கொடுத்தது.


இதன்படி, ஐதராபாத் அணி பேட் கம்மின்ஸ்சை ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் இவ்வளவு தொகைக்கு ஏலம் போனது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பாக சாம் கரனை பஞ்சாப் அணி ரூ. 18.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.