Header Ads



காத்தான்குடியில் சிறந்த முன்மாதிரி - ரகசியம் பாதுகாக்கப்படும், தைரியமாக அனுப்பி வையுங்கள்


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் போதை ஓழிப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டமாக பொது மக்களிடமிருந்து போதை பாவனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தகவல்களை திரட்டும் விஷேட அவசர இலக்கம் (Hotline) இன்று முதல் அறிமுகப்படுத்தபடுகின்றது!


Hotline இலக்கத்தின் WhatsApp கணக்கிற்கு உங்கள் வசமுள்ள போதை பாவனை மற்றும் விற்பனையுடன் தொடர்புடையவர்களின்,


பெயர்/Name :

முகவரி/Address :

புகைப்படம்/Photo :

வீடியோ/Video :

முறைப்பாட்டுக் கடிதம்/ Complaint Letter

Maps Live Location Link :


போன்றவற்றில் உங்களுக்கு கிடைக்கப்பெறும் தகவல்களில் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ Hotline WhatsApp இலக்கத்திற்கு உடனடியாக அனுப்புங்கள்.

 

தங்களினால் குறிப்பிடப்படும் நபரிற்கோ அல்லது குழுவி்ற்கோ எங்களது விஷேட குழுவினால் விஷேட பொலிஸ் குழுவினருடன் இணைந்து சட்ட ரீதியான மற்றும் சமூக ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.


முக்கிய குறிப்பு: மேற்படி தங்களிடமிருந்து கிடைக்கப் பெறும் தகவல்கள் மற்றும் தகவல் வழங்குனரின் விபரங்கள் மிகவும் இரகசியமாக பேணப்படும் என்பதனையும் உறுதியாக தெரிவித்து கொள்வதுடன், தைரியமாக பொது மக்களாகிய நீங்கள் தங்களுக்கு கிடைக்கப்பெரும் தகவல்களை உடனடியாக எங்களிற்கு அனுப்பி இது விடயமாக பூரண ஒத்துழைப்புக்களினை நல்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்!


நமது பிரதேசத்தினை போதையற்ற பிரதேசமாக (Drugs Free) பிரகடனம் செய்வதே எமது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையாகும்.

No comments

Powered by Blogger.