Header Ads



கை உயர்த்தியவர்களுக்கு ஆணி, அடிக்குமாறு கோரிக்கை


பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம், பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) மாலை 4.50க்கு, விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.


அச்சட்டமூலத்தை விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. விவாதமின்றி நிறைவேற்றுவதற்கு 57 வாக்குகள் மேலதிகமாக அளிக்கப்பட்டன.


தற்போது பாராளுமன்றத்தில் குழு நிலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.  அந்த திருத்தங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்க்கட்சியினர் வாக்கெடுப்பு கோரினர்.


வாக்கெடுப்பின் போது சபையில் இல்லாதவர்கள், பெயர் குறிப்பிட்டு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.


அதில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் பெயரும் அழைக்கப்பட்டது.


அப்போது ஒலிவாங்கி முடுக்கிவிடப்பட்டமையால், “ இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக கையுயர்த்தியவர்களுக்கு ஆணி அடிக்கவேண்டும்” எனக்கூறி அமர்ந்தார்.

No comments

Powered by Blogger.