இலங்கையில் விலைமதிப்பிட முடியாத மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு
அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் அதிக கெரட் பெறுமதியும், உயர் தொல்பொருள் பெறுமதி கொண்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணிக்கக் கல்லின் எடை 22 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணிக்கக் கல்லின் உட் பகுதியில் நீர் குமிழிகள் போன்று மின்னுவதால் இந்த இரத்தினம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இதனை ஆராய்ந்த தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
குறித்த மாணிக்கத்தின் உரிமையாளர் அதனை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு வழங்கியுள்ளதாகவும், சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment