Header Ads



ரம்ஸி ராஸிக் அனுபவித்த துயரங்கள்


ஏப்ரல் 2020 இல், குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் (சிஐடி) மொஹமட் ராஸீக் மொஹமட் ரம்­சியை கடு­கஸ்­தோட்­டையில் உள்ள அவ­ரது வீட்டில் வைத்து சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச உடன்­ப­டிக்­கையை (ஐசி­சி­பிஆர்) மீறிய குற்­றச்­சாட்டில் கைது செய்­தது.

முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக கூறப்­படும் இன­வெறி தாக்­கு­தல்­களை எதிர்­கொள்ள “பேனா மற்றும் கணினி” மூலம் “சித்­தாந்த ஜிஹாத்” (போராட்டம்) செய்ய வேண்டும் என முஸ்­லிம்­களை வலி­யு­றுத்தும் வகையில் முகநூல் பதிவை எழு­தி­யதே அவர் செய்த குற்­ற­மாகும்.


சென்ற மாதம் நீதி­மன்­றத்தால் குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்ள கவி­ஞரும் சமூக ஊடக ஆர்­வ­ல­ரு­மான ரம்ஸி, அந்த வலி­மி­குந்த கால­கட்­டத்­தையும், அது அவர் மீதும், அவ­ரது மனைவி மற்றும் இரு பிள்­ளைகள் மீதும் ஏற்­ப­டுத்­திய நிரந்­தர வடுக்கள் குறித்­தும்­சண்டே டைம்­ஸுடன் பகிர்ந்து கொள்­கிறார். இந்த சம்­ப­வத்தால் “நான் மிகவும் கஷ்­டப்­பட்டேன், என் குடும்­பமும் மிகவும் கஷ்­டப்­பட்­டது.” என்றும் அவர் கூறினார்.


முகநூல் பதிவில் ‘ஜிஹாத்’ என்ற வார்த்­தையைப் பயன்­ப­டுத்­தி­ய­தற்கு வருத்­தப்­ப­டு­கி­றீர்­களா, அதனை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தாத வகையில் கூறி­யி­ருக்­கலாம் என கரு­து­கி­றீர்­களா எனக் கேட்­ட­தற்கு, “பதிவில் எதையும் மாற்ற வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று நான் நினைக்­கிறேன். ஏதா­வது தவறு இருந்தால் தானே நான் மாற்ற வேண்டும்.” என்றார்.


“நான் அந்த பதிவை முஸ்லிம் சமூ­கத்­திற்­காக எழு­தி­யதால் தான் நான் ‘ஜிஹாத்’ என்ற வார்த்­தையைப் பயன்­ப­டுத்­தினேன்,” என்று அவர் கூறினார். “நான் முஸ்­லிம்­க­ளுக்கு எழு­தும்­போது, முஸ்­லிம்­களால் புரிந்­து­கொள்­ளப்­படக் கூடிய விதத்­தி­லேயே குறிப்­பிட வேண்டும், எங்கள் மொழி வழக்கில் இந்த வார்த்­தையை பயன்­ப­டுத்­து­கிறோம்’’ என்றார்.


இந்த ஆண்டு நவம்பர் 14 அன்று, ரம்­ஸியின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­ட­தாக உயர் நீதி­மன்றம் அறி­வித்­தது. அவர் ICCPR சட்டம், தண்­டனைச் சட்டம் அல்­லது கணினி குற்றச் சட்டம் ஆகிய மூன்று சட்­டங்­களின் கீழ் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்­கு­ம­ளவு எந்த குற்­றமும் செய்­ய­வில்லை என்றும் அது தீர்­மா­னித்­தது.


சர்ச்­சைக்­கு­ரிய பதிவைத் தொடர்ந்து வந்த நாட்­களில், ரம்­ஸிக்கு எதி­ராக முஸ்லிம் விரோத வெறுப்பு பதி­வுகள் முக­நூலில் அதிகம் பகி­ரப்­பட்டன். அத்­துடன் அவ­ரது உயி­ருக்கு அச்­சு­றுத்­தல்­களும் விடுக்­கப்­பட்­டன. இது பற்றி உட­ன­டி­யாக பொலிஸ் மா அதி­ப­ரிடம் புகார் செய்தார். பொலிசார் அவ­ருக்கு பதில் வழங்­கவோ பாது­காப்பை வழங்­கவோ இல்லை. மாறாக முறைப்­பாடு செய்த ரம்­ஸி­யையே பொலிசார் அன்று மாலை கைது செய்­தனர்.


அடுத்த ஐந்து மாதங்­களும் எட்டு நாட்­களும் அவரை தடுப்புக் காவலில் வைத்­தி­ருந்­தனர். செப்­டம்பர் 2020 இல், அவ­ருக்கு பிணை வழங்­கப்­பட்­டது.

கைது செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து, ரம்ஸி ராஸிக் கொழும்­புக்கு அழைத்து வரப்­பட்டு, சிஐடி தலை­மை­ய­கத்தில் இர­வோடு இர­வாகத் தங்க வைக்­கப்­பட்டார். அங்கு இருந்­த­வர்கள் அல்­லாஹ்வை அவ­ம­திக்கும் வார்த்­தை­களைப் பயன்­ப­டுத்தி ரம்­ஸியை நோக்கி கூச்­ச­லிட்­ட­துடன் ரம்ஸி மீது தாக்­கு­தலும் நடத்­தினர். அவர்கள் “நீ எங்கள் மீது போர் பிர­க­டனம் செய்ய முயன்­றி­ருக்­கிறாய்” என்று குற்­றம்­சாட்­டினர் கூச்­ச­லிட்­டனர். ரம்ஸி மறுநாள் மாஜிஸ்­திரேட் முன் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார். இதன்­போது அங்கு அவ­ரது உடல்­நிலை மோச­ம­டைந்­தது.


ரம்­ஸிக்கு முடக்கு வாதம் உள்­ளது. இதனால் விவ­சாயத் திணைக்­க­ளத்தில் மொழி­பெ­யர்ப்­பா­ள­ராக கட­மை­யாற்றி வந்த அவர் முன்­கூட்­டியே ஓய்­வு­பெற வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டது. “எனக்கு ஏற்­பட்ட நோய் கார­ண­மாக, சிறையில் தலை­ய­ணைகள் இல்­லாமல் சிமென்ட் தரையில் தூங்­கு­வது மிகவும் கஷ்­ட­மாக இருந்­தது,” என்று அவர் கூறினார். “ சிறைக்குள் மிகவும் நெரி­ச­லாக இருந்­தது, சில கைதிகள் கழிப்­ப­றை­களில் தூங்­கினர், மற்­ற­வர்கள் நின்று கொண்டே தூங்­குவர்.” என்றார்.


சிறைச்­சா­லையில் குந்தி மலங்­க­ழிக்கும் கழிப்­பறை மட்­டுமே இருந்­ததால், கழி­வ­றையைப் பயன்­ப­டுத்­து­வது கூட அவ­ருக்கு கஷ்­ட­மாக இருந்­தது. இரண்டு மாதங்­க­ளுக்குள், ரம்­ஸியின் கால்­களில் ஏற்­பட்ட புண்­க­ளுக்­காக சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்றார். “அவர்கள் எனக்கு வலி நிவா­ர­ணி­களை மட்­டுமே கொடுத்­தனர் மற்றும் என் காயங்­க­ளுக்கு மருந்­திட்­டனர்,” என்று அவர் கூறினார். “எனக்குத் தேவை­யான மருந்து தங்­க­ளிடம் இல்லை என்று சிறைச்­சாலை வைத்­தி­ய­சாலை ஊழி­யர்கள் கூறினர், அது கொரோனா காலம் என்­பதால், எனது மூட்­டு­வ­லிக்­கான மருந்தை எனது குடும்­பத்­தி­னரால் தொடர்ந்து அனுப்ப முடி­ய­வில்லை.”


மற்­றொரு முறை, ஒன்லைன் வழி­யாக நடந்த நீதி­மன்ற அமர்வில் கலந்து கொள்ள சிறைக் காவ­லர்­களால் அவ­ச­ர­மாக அழைத்துச் செல்­லப்­பட்­ட­த­போது, ரம்ஸி தடுக்கி வீழ்ந்து காயம் அடைந்தார். “எனது மூட்­டு­வலி கார­ண­மாக என்னால் வேக­மாக நடக்க முடி­யாது. பொலிசார் அவ­ச­ரப்­ப­டுத்­தி­யதால் நான் அவ­ச­ரப்­பட வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டது,” என்று அவர் கூறினார். ” ‘‘அந்த ஒன்லைன் அமர்வில் வலியைச் சகித்துக் கொண்டே பங்­கு­பற்­றினேன்” என்றார்.


இவ் விபத்து நடந்து ஒரு வாரத்­திற்கு பின்­னரே டாக்­டர்கள் எக்ஸ்ரே எடுத்து கை முறிந்­தி­ருப்­பதை கண்­டு­பி­டித்­தனர்: அவர்கள் அன்று சரி­யாக சிகிச்சை வழங்­க­வில்லை, அதனால் அந்தக் கை இன்­று­வரை பழைய நிலைக்குத் திரும்­ப­வில்லை” என்றும் அவர் குறிப்­பிட்டார்.


கொவிட்-19 தடுப்பு விதி­மு­றைகள் குறிப்­பாக கைதி­க­ளுக்கு கடு­மை­யா­கவே இருந்­தது. இதனால் உற­வி­னர்கள் அவர்­களைப் பார்க்­கவோ தேவை­யா­ன­வற்றை வழங்­கவோ முடி­யாத நிலை ஏற்­பட்­டது. கொரோனா விதி­மு­றைகள் தளர்த்­தப்­பட்­டதும் ரம்­ஸியை குடும்­பத்­தினர் அவ்­வப்­போது சந்­தித்­தனர். ஆனால் அவர் காவலில் இருந்த காலம் வரை, அவர் ஒரு முறை கூட தனது சட்­டத்­த­ர­ணி­களை சந்­திக்­க­வில்லை. அவர் நீதி­வா­னுடன் இணையம் வழி­யாகப் பேசி­ய­போது, காவலில் இருந்­த­போது தான் அனு­ப­வித்த கஷ்­டங்­களைப் பற்றி சுதந்­தி­ர­மாக நீதி­வா­னிடம் கூறு­வ­தற்கு சிறைச்­சாலை அதி­கா­ரிகள் இட­ம­ளிக்­க­வில்லை. இந்த அனு­பவம் தன்னை மன உளைச்­ச­லுக்கு ஆளாக்­கி­யுள்­ளது என்­கிறார்.


“ரிமாண்டில் அனை­வரும் மோச­மாக நடத்­தப்­ப­டு­கி­றார்கள்,” என்று அவர் கூறினார். “ஆனால் காவ­லர்கள் என்னை உள­வியல் ரீதி­யாக குறி­வைத்து, ‘ஐஎஸ்­ஐஎஸ் காரன்’ என்று அழைத்­தனர். என்னை ஒரு பயங்­க­ர­வாதி போல் நடத்­தினர்.” என்றார். அதே­போன்று சிறைக்கு வெளியே, அவ­ரது குடும்­பத்­தி­னரும் பயங்­க­ர­வா­தி­களைப் போன்றே பார்க்­கப்­பட்­டனர்.

அவர் கைது செய்­யப்­பட்­ட­போது ரம்­ஸியின் மக­ளுக்கு வயது 16. தந்தை விளக்­க­ம­றியல் சிறையில் இருந்­த­போமே மகள் சாதா­ரண தர பரீட்­சைக்குத் தோற்­றினார். அச்­சு­றுத்­தல்­களால் தாங்கள் தாக்­கப்­ப­டலாம் என்ற பயத்தில் மகள் இருந்தார். அதனால் அவர் பயணம் செய்­வ­தையோ அல்­லது டியூஷன் வகுப்­பு­க­ளுக்குச் செல்­வ­தையோ தவிர்த்­து­விட்டார்.


“உயர்­நீ­தி­மன்­றத்தால் பிணை வழங்­கப்­பட்ட பிறகும், நண்­பர்கள் எங்­க­ளிடம் பேசு­வ­தற்கு பயந்­தனர், மேலும் சில அய­ல­வர்கள் எங்­களை பயங்­க­ர­வா­திகள் போல பார்த்­தார்கள்” என்று ரம்ஸி கூறினார். இந்தக் கைதினால் “எனது நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­பட்­டது.” என்றார்.


உள­வியல் பாதிப்­புக்கு மேல­தி­க­மாக, அவ­ரது குடும்பம் பொரு­ளா­தார நெருக்­க­டி­யையும் சந்­தித்­தது. முன்­கூட்­டியே ஓய்வு பெற்­றதால் சிறிய ஓய்­வூ­தி­யமே அவ­ருக்கு கிடைத்­தது. ஃப்ரீலான்ஸ் வேலைகள் இல்­லாமல், அன்­றாட செல­வு­களைச் சந்­திப்­பது கடி­ன­மாக இருந்­தது. இந்த பாதிப்­பு­க­ளி­லி­ருந்து இன்று வரை இக் குடும்பம் மீள­வில்லை.


இப்­போ­தெல்லாம் எனக்கு வேலை குறை­வா­கவே கிடைக்­கி­றது,” என்று ரம்ஸி விளக்­கினார். “கை மற்றும் மோச­ம­டைந்து வரும் மூட்­டு­வலி கார­ண­மாக கணி­னியில் தட்­டச்சு செய்­வதும் கடினம்.” என்றார்.


தான் கைது செய்­யப்­பட்­டி­ருப்­பது துன்­பு­றுத்­தலை இலக்­காகக் கொண்­டது என்றும், சட்­டத்தை மீறிய அடிப்­ப­டையில் அல்ல என்றும் ரம்ஸி கூறு­கிறார். (தற்­போது மக்கள் தவ­றாகக் கைது செய்­யப்­பட்டு தடுப்புக் காவலில் வைக்­கப்­படும் போக்கு அதி­க­மாக இருப்­ப­தாக உயர்­நீ­தி­மன்றம் தனது தீர்ப்பில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­மையும் கவ­னிக்­கத்­தக்­கது)


“ICCPR இன் கீழ் மஜிஸ்­திரேட் எனக்கு பிணை வழங்க முடி­யாது என்­பது அவர்­க­ளுக்குத் தெரியும். இந்த சட்­டத்தின் கீழ், அவர்கள் குறைந்­தது ஆறு மாதங்­க­ளுக்கு என்னை உள்ளே வைத்­தி­ருக்க முடியும்.” என்று குறிப்பிட் அவர் பிணை கிடைத்த பிறகும், வழக்கு மேலும் மூன்று ஆண்­டுகள் நீடித்­த­தா­கவும் கூறினார்.


அவரைக் கைது செய்து காவலில் வைத்­தி­ருப்­ப­தற்கு, சிஐடி அதி­கா­ரிகள் ஐசி­சி­பிஆர், குற்­ற­வியல் சட்டம் மற்றும் கணினி குற்றச் சட்டம் ஆகி­ய­வற்றின் பிரி­வு­களை “ஆயு­தங்­க­ளாக” பயன்­ப­டுத்­தினர் மற்றும் “தண்­ட­னைக்கு சம­மான நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளனர்” என்றும் உயர்­நீ­தி­மன்றம் தனது தீர்ப்பில் கூறி­யது.

ரம்ஸி ராசிக்கை கைது செய்து தடுத்து வைத்­த­மைக்­காக அரசு அவ­ருக்கு ரூ. 10 இலட்சம் இழப்­பீடு வழங்க வேண்டும் என்றும் கணினி மற்றும் தட­ய­வியல் பயிற்சிப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி மற்றும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் ஆகியோர் ரம்­ஸிக்கு அவர்­களின் தனிப்­பட்ட நிதி­யி­லி­ருந்து தலா ரூ. 30,000 வழங்க வேண்டும் என்றும் உயர் நீதி­மன்றம் அண்­மையில் தீர்ப்­ப­ளித்­தது.


ஒப்­பீட்­ட­ளவில் இது சிறிய இழப்­பீடு என்ற போதிலும் இந்த தீர்ப்பு முக்­கி­யத்­து­மிக்­கது என ரம்ஸி கரு­து­கிறார். ” நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். இத் தீர்ப்பு அனை­வ­ருக்கும் பய­னுள்­ள­தாக இருக்கும். இதன் பிறகு தன்­னிச்­சை­யாக மக்­களைக் கைது செய்­வ­தற்கு பொலிசார் தயங்­கு­வார்கள்.’’ என்றார்.

இன்று, ரம்ஸி ஒரு சுயா­தீன மொழி­பெ­யர்ப்­பா­ள­ரா­கவும் சமூக ஊடக ஆர்­வ­ல­ரா­கவும் கிறேன். இத் தீர்ப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதன் பிற­கு தன்னிச்சையாக மக்களைக் கைது செய்வதற்கு பொலிசார் தயங்குவார்கள்.’’ என்றார்.


இன்று, ரம்ஸி ஒரு சுயா­தீ­ன மொழிபெயர்ப்பாளராகவும் சமூக ஊடக ஆர்வலராகவும் சிவில் சமூக செயற்­பாட்­டா­ள­ரா­க­வும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவர் சுதந்திரம், கலை மற்றும் வெளிப்பாட்டிற்கான நடவடிக்கைக் குழுவு­ட­ன் இணைந்­தும் பணியாற்றுகிறார். மேலும் தனக்கு விருப்­ப­மா­­ன இதயத்திற்கு நெருக்கமான தலைப்புகளில் எழுதியும் வரு­கி­றார்.

உங்கள் வாழ்வில் சந்­தித்த இந்த அனு­பவம் சமூக விவ­கா­ரங்­களில் குரல் கொடுப்­ப­தற்கு உங்­க­ளுக்கு அச்­சத்தை தந்­ததா எனக் கேட்­ட­­தற்கு ‘‘ என் பங்கை தொடர்ந்து செய்வேன்,” என அவர் பதிலளித்தார். “குறைந்த பட்சம் அடுத்த தலைமுறைக்காவ­து, நம் நாட்டிலும் சமூகத்திலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்” என்­றார்.


நன்றி: சண்டே ரைம்ஸ் 03.12.2023


Vidivelli

1 comment:

  1. முதலில் இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களுக்கு ஜிஹாத் என்றால் என்ன அதன் வடிவம் எத்தனை வகை அதன் பெறுமானம் அதற்க்கு எத்தனை பிரிவுகள் வகைகள் அதன் தோணி எவ்வாறு உள்ளது என்பதைப்பற்றி தொடர் விளக்கத்தை இந்த நாட்டில் இருக்கும் சமுக புத்தி ஜீவிகள் உலமாக்கள் போருப்புதாரிகள் பெரும்பான்மை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் பொதுவாக காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் .ஒருநாள் மட்டும் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்துவதால் விளங்க படுத்த முடியாது.

    நமது சமுகத்தில் யாராவது ஜிஹாத் பற்றி பேசினால் அதனை கொருத்து பாதுகாப்பு துறைக்கு போட்டு கொடுப்பதற்கு இன்னும் ஒரு தரப்பு நமது சமுகத்தில் இருப்பதுதான் இவ்வலவு பிரச்சினை
    எந்த விடயத்தில் மனிதன் தியாகம் செய்கிறானோ அது ஜிஹாத் பொதுவாக ஜிஹாத் என்பது ஒரு போராட்டம் .
    1 ஒரு கல்வி துறையில் முழு மூச்சாக ஈடுபடுவது ஜிஹாத்
    2 வியாபாரத்தில் இரவு பகலாக பாடுபடுவதும் ஜிஹாத்
    3விவசாயத்தில் மும்முரமாக ஈடுபடுவது ஒரு தியாகம் அதுவும் ஜிஹாத்
    இவ்வாறு எந்தந்த விடயத்தில் மனிதன் போராடி உழைக்கிறானோ அதன் பெயர் தியாகம் அதுதான் ஜிஹாத் இதை விளங்கப்படுத்த முடியாமல் ஒரு சமுகத்தை ஒடுக்கு முறைக்கு ஆளாக்கி வைத்து இருப்பது சமூக தலைமைகள் .

    ReplyDelete

Powered by Blogger.