Header Ads



லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கிய சவுதி தூதரகம்


இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம், இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி சனிக்கிழமையன்று நடைபெற்ற இராஜதந்திர அறக்கட்டளை பஜாரில் பங்கேற்றது. இதன் வருமானம் கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.


இவ்வாண்டு நடைபெற்ற அறக்கட்டளை பஜாரில் அமையப் பெற்றிருந்த சவூதி விற்பனையகத்தில் உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய காட்சிப் பொருட்களுக்கு அதிக கேள்வி இருந்ததாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்தார். 


சவூதி அரேபிய தயாரிப்புகள் உட்பட, பிரபலமான சவூதி உணவுகளும் காணப்பட்டமையாள் அங்கு வந்த பார்வையாளர்கள் அவற்றை நுகர்வதில் பெறும் ஆர்வம் காட்டியதாகவும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.


கொழும்பில் உள்ள சவூதி தூதரகம் இவ்வாறான பஜார்களிலும், எதிர்காலத்திலும் இவ்வாறான தொண்டாற்றும் செயற்பாடுகளிலும் பங்குபற்றவுள்ளதாக அவர் தெரிவித்தார்





No comments

Powered by Blogger.