பாபரி மஸ்ஜிதை நாம் மறந்துவிட்டால்...?
- M S Abdul Hameed -
மாநபி ﷺ அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றபொழுது, குபா என்ற இடத்தில் தங்கினார்கள். அங்கே அவர்கள் செய்த முதல் பணி ஒரு மஸ்ஜிதை எழுப்பியதுதான்.
ஏனெனில் ஒரு முஸ்லிமுக்கு அடையாளம் என்பதே மஸ்ஜிதுதான். தன்னைத் தாழ்மைப்படுத்தி, படைத்த இறைவனிடம் மண்டியிட்டு, ஸஜ்தா செய்வதற்காக பூமியில் புனிதமாக உருவாக்கப்படுவதுதான் மஸ்ஜித்.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “இறைவனையும், இறுதி நாளையும் நம்புகிறவர்கள் மஸ்ஜிதுகளை வளமாக்குவார்கள்.” (திர்மிதீ)
நிச்சயமாக, மஸ்ஜித் வெறும் ஒரு கட்டடம் மட்டுமல்ல. அது அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கான அடையாளச் சின்னம்!
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “மஸ்ஜிதை நேசிப்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.” (அபு சஈத் (ரலி), தப்ரானீ)
பாபரி மஸ்ஜிதை நாம் மறந்துவிட்டால், அது என்றென்றும் மறக்கப்பட்டு விடும். நமது அடிப்படைக் கடமை பாபரியின் செய்தியை நம்முடைய அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கடத்தி, என்றென்றும் அதனை உயிரோடு வைத்திருப்பதுதான்!
பாபரி மஸ்ஜிதின் மறுபிறப்பின் செய்தியால், நமது தலைமுறையின் வீர வரலாறு எழுதப்படவேண்டும்.
எனவே பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும் வரை நம்முடைய குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
மஸ்ஜிதின் புனரமைப்பு குறித்து நாம் சாதகமாக, நேர்நிலையாக (பாசிட்டிவாக) சிந்திக்கவேண்டும். அதுவே நமது வரலாற்றுப் பங்களிப்பாகும்.
பலநூறு வருடங்களுக்குப் பிறகு, நபி ﷺ அவர்கள் இணைவைப்பு அசுத்தத்திலிருந்து கஅபாவைச் சுத்தம் செய்தார்கள்.
88 வருடங்களுக்குப் பிறகு, ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் பைத்துல் முகத்தஸை சிலுவைப் படையிடமிருந்து மீட்டெடுத்தார்.
எனவே இது ஒருபோதும் நம்பிக்கையற்ற பணி அல்ல!
Post a Comment