அவசர உதவி தேவை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
யாழ்ப்பாணத்தில் தங்கிநின்று சிகிச்சை பெற வருவோருக்கான இலவச தங்குமிட வசதி
மேற்படி எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற, இலவச சேவை மென்மேலும் விருத்தி செய்யப்பட வேண்டிய கட்டாய, நிலையில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
ஏனெனில் இவ்விலவச சேவையை பெற்றுக் கொள்வதற்காக அழைப்பை மேற்கொள்ளுவோரில் 50 வீதமானவர்களே எமது இச்செயற்திட்டத்தின் மூலம் பயனடைய கூடியதான வசதி எம்மிடம் இருக்கின்றது. ஏனையோரும் இச்சேவையை பெற்று பயனடைய தனவந்தர்கள் நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து சதக்கா ஜாரியாவாக இதற்கான ஏற்பாட்டை நாம் எதிர்பார்க்கின்றோம்
எனவே கப்ரிலும் மறுமை வாழ்விலும் ஒளி வீசக்கூடிய இப்பேற்பட்ட நல்லறங்களில் நாம் இணைந்து கொள்வோமாக.
"எவன் ஒருவன் ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை இவ்வுலகில் நீக்கி வைக்கின்றானோ அவனது கஷ்டத்தை மறுமையில் அல்லாஹ் அவனை விட்டும் நீக்கிவிடுகின்றான்"
தொடர்புகளுக்கு.....
தலைவர் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித் யாழ்ப்பாணம்.
அஷ்ஷைஹ்க் Faizer M Aliyar (Casimi Madhani)
0777155119 / 0778831938
யாழ்ப்பாணத்தில் தங்கிநின்று சிகிச்சை பெற வருவோருக்கான இலவச தங்குமிட வசதி
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருகை தருவோர் தங்குமிட வசதிக்காக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதை நாம் அறிகின்றோம்.
இவற்றைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினராகிய நாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நலன் விரும்பி ஒருவர் ஊடாக, தங்கி நின்று நோயாளியை பராமரிப்போருக்கான இலவச தங்குமிட வசதி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.
எனவே சிரமங்களை தவிர்த்து, நேர்த்தியான நிர்வாக நடவடிக்கைகளை வழங்க முன்கூட்டிய தொடர்பாடல்கள் வழிவகுக்கும் என நம்புகிறோம்.
எமது நல்லறங்கள் அனைத்தையும் வல்லவன் ரஹ்மான் ஈருலகிலும் பொருந்திக்கொள்வானாக.... ஆமீன்
Post a Comment