பலஸ்தீன் விவகாரத்தில் ரணிலின், நிலைப்பாடு என்ன..?
உக்ரேன் விவகாரத்தில் ஜனாதிபதி உடனடியாகப் பதிலளித்ததை போன்று பலஸ்தீன விவகாரத்திலும் வெளிப்படையான மற்றும் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கர் சபையில் வலியுறுத்தினார்.
பலஸ்தீனப் பிரச்சினையில் எது சரி? எது தவறு? என்பது கறுப்பு வெள்ளை போல் தெட்ட தெளிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) வரவு செலவு திட்டத்தின் வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
இரு மாதங்களுக்கும் மேல் இஸ்ரேல் காஸா மீது கொடூரமான தாக்குதலை நடத்தி வருவதாகவும் இதனால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் உக்ரைன் விவகாரத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகளை அடிப்படையாக கொண்டு பலஸ்தீன் விவகாரத்தில் ஜனாதிபதி வெளிப்படையான மற்றும் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் அவர் கூறினார்.
இஸ்ரேலின் இந்த இன அழிப்பை கண்டிப்பதுடன் உடனடி போர் நிறுத்தத்துக்காக தெளிவான குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment