குர்ஆனை கையில் எடுக்கும் இளைஞர்கள் - மாறப் போகிறதா அமெரிக்கா..? காஸா மக்கள் உலகிற்கு கற்றுக்கொடுக்கும் மகத்தான பாடம்
- Musthafa Qasimi -
"பாலஸ்தீன முஸ்லிம்களின் உறுதியைப் புரிந்து கொள்வதற்காக அமெரிக்க இளைஞர்கள் குர்ஆனை கையில் எடுக்கிறார்கள்."
-இது பிரிட்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின் தலைப்பு. அதன் கீழே எழுதப்பட்டுள்ளதாவது:
"மார்க்க நெறிமுறைகளுடன் "பாசவுணர்வை வளர்ப்பது" குறித்து முயற்சிக்கும் அவர்கள், தமது மதிப்பீடுகளுக்கு உகந்த உள்ளடக்கத்தை குர்ஆனில் பெற்றுக் கொள்கிறார்கள். மேற்குலகில் நெடுங்காலத்திற்கு முன்பே பாசவுணர்வை அழித்து முடித்து விட்டார்கள்."
காஸா மக்கள் உலகமாந்தரை எந்நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள் பார்த்தீர்களா!? கருணையாளன் அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலியும் நல்லுதவியும் வழங்கியருள்வானாக!
Post a Comment