Header Ads



மோதிக் கொண்ட விஜயதாசவும், றிசாத்தும்...!!


நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் நீதிபதி ஒருவர் குறித்த பதியுதீனின் கருத்து தொடர்பில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


நாடாளுமன்றத்தின் இன்றைய (06.12.2023) அமர்வின் போதே இருவரும் மேற்குறிப்பிட்டவாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


நீதிபதி ஒருவரை ரிஷாட் பதியுதீன் இழிவுபடுத்தியுள்ளதாக விஜயதாச ராஜபக்ச குற்றம் சாட்டிய நிலையில், தான் எந்த ஒரு நீதிபதியின் பெயரையும் எனது உரையின் போது குறிப்பிடவில்லை என ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்தும் ரிஷாட் பதியுதீன் கூறுகையில், குறிப்பிட்ட நீதிபதியை நான் ஒரு நாள் சபித்ததாக விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். அனால் நான் யாரையும் சபிக்கவில்லை என்பதோடு எந்த ஒரு நீதிபதியின் பெயரையும் குறிப்பிடவில்லை.


அத்துடன், முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, “நீதிபதி ஒருவருக்கு எதிரான கருத்துக்களை கூறும் போது, நீதியமைச்சர் அதனை எதிர்க்கவில்லை” என தெரிவித்திருந்தார்.


இதற்கு விஜயதாச ராஜபக்ச பதிலளிக்கும் போது, “ரிஷாட் பதியுதீன், 'முஸ்லிம் நீதிபதி' என்ற வார்த்தையை ஒரு குறிப்பிட்ட நீதிபதியை சுட்டிக்காட்டவே பயன்படுத்தியுள்ளார்.


மேலும், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் விமர்சித்ததை நான் அவருக்கு நினைவுபடுத்துகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.


1 comment:

  1. ​பொதுமக்களின் பணத்தை வரி என்ற பெயரில் பறித்தெடுத்து ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபா செலவழித்து பாராளுமன்றத்தைக்கூட்டி இந்த மகோடிஸ்கள் ஒருவரையொருவர் திட்டித் தீர்க்கவும் ஒருவர் மற்றவரைப் பழிசுமத்தவும் பாவிக்கும் இந்த நடைமுறைக்கு எப்போது முடிவு கிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.