பைடனின் மகன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் என்டர் பைடனுக்கு எதிரான இரண்டாவது குற்றவியல் வழக்காக மத்திய அரசு வழக்கறிஞர்கள் வரிக் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2016-19 க்கு இடையில் குறைந்தபட்சம் 1.4 மில்லியன் டாலர் கூட்டாட்சி வரி ஏய்ப்பு செய்ய அவர் திட்டமிட்டதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரிகளை தாக்கல் செய்யத் தவறியது மற்றும் செலுத்தத் தவறியது, வரிக் கணக்குகளை பொய்யாக்குவது மற்றும் மதிப்பீடுகளைத் தவிர்ப்பது என பல குற்றச்சாட்டுகளுக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், 53 வயதுடைய ஹண்டர் பைடன் செப்டம்பரில் டெலாவேரில் துப்பாக்கிகள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டார்.
அதன்படி, இந்த வரி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஹண்டர் பிடன் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment