Header Ads



பிணை கைதிகளுக்கு ஹமாஸ் போதை மருந்து கொடுத்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு


ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்கும் போது அவர்கள் அமைதியாக இருப்பதற்காக போதை மருந்து கொடுத்ததாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி உள்ளது.


இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் இருந்து கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தீவிரவாதிகள் சுமார் 240 பேரைக் கடத்திச் சென்றனர். இவர்களில் 105 பேர் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.


இந்நிலையில் பிணைக் கைதிகளை விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு க்ளோனெக்ஸ் என்ற மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் இஸ்ரேலின் சுகாதார அமைச்சக பொது மருத்துவத் தலைவர் ஹகர் மிஸ்ராஹி கூறுகையில், ‘செஞ்சிலுவைச் சங்கத்திடம் இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஒப்படைப்பதற்கு முன்பு, அவர்களுக்கு க்ளோனெக்ஸ் என்ற போதை மாத்திரைகளை ஹமாஸ் தீவிரவாதிகள் கொடுத்துள்ளனர்.


அதனால் விடுவிக்கப்பட்ட பிணையக் கைதிகள் அமைதியாக இருந்தனர். அவர்கள் அமைதியாக இருப்பதற்காக அவர்களுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.


மேலும், விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளின் இரத்தப் பரிசோதனையின் அடிப்படையில் போதை மருந்து கொடுக்கப்பட்டதா? அல்லது அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரியவந்ததா? என்பது பற்றியும் எத்தனை பேருக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் மிஸ்ராஹி குறிப்பிடவில்லையென கூறப்படுகிறது.

2 comments:

  1. இனத்துவேசம் தலைக்கு ஏறிய இந்த காபிருக்கு ஹமாஸை பகிரங்கமாகக் குற்றம் சுமத்த வழிதேடிக் கொண்டிருந்தான், இப்போது தான் கிடைத்திருக்கின்றது. இஸ்ரவேலின் யுத்தத்தின் போக்கு முழுக்க முழுக்கப் பொய், போலி நாடகம், வேசம் ஆகியவற்றில்தான் தங்கியிருக்கின்றது.அது எவ்வளவு காலம் தொடரலாம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  2. Hamas would have given urine to these Zionist dogs.

    ReplyDelete

Powered by Blogger.