காசாவில் இருந்து மக்கள் வெளியேறி, ஹமாஸ் சார்பு நாட்டுக்கு செல்ல வேண்டும் - அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்
காசாவின் பாலஸ்தீனிய மக்கள் தங்கள் பிரதேசத்தை விட்டு வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் நிக்கி ஹேலியின் பரிந்துரையை "வெளிப்படையான இனவெறி" என ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் கண்டித்துள்ளார்
அல்பானீஸ் அமெரிக்க செய்தி சேனலான ஏபிசிக்கு அளித்த பேட்டியில்,
"பாலஸ்தீனியர்கள் ரஃபா வாயிலுக்குச் செல்ல வேண்டும், எகிப்து அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்" என்று மெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் நிக்கி ஹேலி கூறினார்.
"அவர்கள் ஹமாஸ் சார்பு நாடுகளுக்கு செல்ல வேண்டும்," என்று ஹேலி மேலும் கூறினார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரான அல்பனீஸ், சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், சர்வதேச சட்டத்தின் கீழ் "கட்டாய இடப்பெயர்வு" தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், "பரவலான தாக்குதல்களுக்கு" மத்தியில் அது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக கருதப்படும் என்றும் ஹாலிக்கு நினைவூட்டினார்.
Post a Comment