Header Ads



"இது பெரும் அபாயகரமானது”


கண்டி பொலிஸ் பிரிவில் 17 பொலிஸ் நிலையங்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் கடந்த மூன்று வருடங்களுக்குள் 16 வயதுக்கு குறைந்த சிறுமிகள் 132 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியரான சட்டத்தரணி பாலித பண்டார சுபசிங்ஹ தெரிவித்துள்ளார்.


16 வயதுக்கும் குறைந்த சிறுமிகள் 132 பேரும் 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.


“அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய விருப்பத்தின் பேரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டள்ளனர் இது பெரும் அபாயகரமானது” என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.


17 பொலிஸ் நிலையங்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகளில், 15 சிறுமிகள் தங்களுடைய விரும்பமின்றி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.


14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளில் 2021 ஆம் ஆண்டு 79 பேரும், 2022 இல் 93 பேரும்  கண்டி வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய பிரிவுக்கு, வைத்திய பரிசோதனைக்கு பொலிஸ் நிலையங்களின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


2018 முதல் 2021 வரையில், 16 வயதுக்கும் குறைந்த சிறுமிகள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 6,307 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ​அதில் 5,055 முறைப்பாடுகள் சிறுமிகளால் தங்களுடைய விருப்பத்தின் பேரில் முன்வந்து செய்யப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.