லிட்ரோவை மூடப் போகிறாரா ரணில்...?
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இறுதிநாள் விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
லிட்ரோ நிறுவனம் எண்ணாயிரம் மெட்ரிக் தொன் சேமிப்புத் திறன் மற்றும் சுமார் எண்பது இலட்சம் சிலிண்டர்களை விநியோகத்து நாட்டிற்கு நான்கரை பில்லியன் ரூபா இலாபம் ஈட்டித் தருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு நாட்டின் மதிப்புமிக்க நிறுவனங்களை மூடி தனியார் தொழிலதிபர்களுக்கு வழங்குவதற்கான அனைத்து திட்டங்களையும் அரசு தீட்டிவருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். IB
Post a Comment