இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் காலத்தில்..
இமாம் அபூஹனீபா (ரஹ் ) அவர்கள் காலத்தில் ஒருவன் தான் நபியென வாதிட்டான்.
இமாமிடம் வந்த அவன் "இமாம் அவர்களே எனக்கொரு வாய்ப்பளியுங்கள்நா ன் நபி என நிரூபித்துக்காட்டுகிறேன்" என்றான்.
இதுதொடர்பாக இமாம் அவர்கள் கூறினார்கள்:
யாராவது ஒரு முஸ்லிம், அவனிடம் நீ நபியென்பதற்கான ஆதாரத்தைக் காட்டு எனக் கேட்டாலே, அவர் இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறிவிடுவார்.
ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்
எனக்குப்பின் வேறு நபி வரமாட்டார் என தெளிவாகச் சொல்லியிருக்க எங்கே ஆதாரம் காட்டு? எனக் கேட்பது நபி அவர்களி்ன் சொல்லை சந்தேகிப்பதற்கு ஒப்பாகும்.
எனவே அவனிடம் ஆதாரம் கேட்கவேண்டிய அவசியமில்லை. அவன் பொய்யன் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
--------ரூஹுல் பயான்
உருது இணையதளத்திலிருந்து தமிழில்
#கணியூர்இஸ்மாயீல்நாஜிபாஜில்மன்பஈ ,தேவ்பந்தி
Post a Comment