நாட்டில் உள்ள எந்த நபரையும், எந்நேரத்திலும் கண்டுபிடிக்க புதிய கணினி அமைப்பு
நாட்டில் உள்ள எந்தவொரு நபரையும் எந்த நேரத்திலும் கண்டுபிடிக்கும் வகையில் புதிய கணினி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் தகவல்களை சேகரிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக நிறுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது இன்று (12.12.2023) இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த தகவல்கள் தமிழ் மக்களிடம் மட்டுமன்றி அனைத்து சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களிடமிருந்தும் சேகரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த பணி யுத்த காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment