Header Ads



மதக் குற்றங்களை விசாரணை செய்ய, தனிப் பிரிவு (முழு விபரம் இணைப்பு)


சமூக வலைத்தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மதக் குற்றங்களை விசாரணை செய்வதற்காக தனியான பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


பதில் பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோனின் பணிப்புரையின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, "சமூக வலைத்தளங்கள் மூலம் செய்யப்படும் மதக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை பெறுவதற்கு தனிப் பிரிவை நிறுவுமாறு, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவு மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.


அதன்படி, மதங்களை இழிவுபடுத்துவது தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவின் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதன்படி, பொதுமக்கள் 0112 300 637 என்ற இலக்கத்தின் ஊடாக இது தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க முடியும்.


தொலைநகல் எண் – 0112 381 045

 

மின்னஞ்சல் முகவரி - ccid.religious@police.gov.lk


எந்த வகையிலும் புகார் அளிக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


-அததெரண-

No comments

Powered by Blogger.