இலங்கை தொடர்பில் பில் கேட்சின் வாக்குறுதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, BMGF இணைத்தலைவரான பில் கேட்ஸுடன் ஒரு தந்திரோபாய நோக்கமுடைய சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
டுபாயில் நேற்றைய தினம் (03.12.2023) நடைபெற்ற காலநிலை தொடர்பான COP 28 மாநாட்டிலேயே ஜனாதிபதி பில் கேட்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, மாறும் காலநிலைகளை எதிர்கொண்டு வலுவான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு BMGF நிறுவனமானது ஆதரவளிக்கும் என கேட்ஸ் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.
காலநிலை மாற்றங்களுக்கு வினைத்திறனாக முகம்கொடுப்பதற்கு, இலங்கையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் இந்த கூட்டுறவின் நோக்கமாகும்.
COP 28 மாநாட்டில் மாறிவரும் காலநிலைகளை முகம்கொடுப்பதற்கான உலகின் முயற்சிகளில் இலங்கை முக்கியமான பங்கை வகிக்கும் என ஜனாதிபதி ரணில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment