Header Ads



நான் ஒரு முஸ்லிம், தொழுவதற்கு வேறு ஒருவரிடம் அனுமதி வாங்க வேண்டுமா..? முகமது ஷமியின் ஆக்ரோசமான பதில்


நான் ஒரு முஸ்லிம், நான் ஒரு இந்தியர். இதில் ஏதாவது பிரச்சனை என்றால் நான் இந்தியாவிலேயே இருந்திருக்க மாட்டேன். நான் தொழுவதற்கு செய்ய வேறு ஒருவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றால் நான் இந்தியாவை விட்டே வெளியேறி விடுவேன் என முகமது ஷமி காட்டமாக பேசி இருக்கிறார்.


2023 உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமி தொழ முடியாமல் தவித்தார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அதற்கு கடும் பதிலடி கொடுத்து பேசி இருக்கிறார் முகமது ஷமி.


முகமது ஷமி, 2023 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக இருந்தார். அந்த தொடரின் போது இலங்கை அணிக்கு எதிராக முகமது ஷமி 5 விக்கெட்கள் வீழ்த்தினார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். அப்போது அவர் கீழே முட்டி போட்டு அமர்ந்த போது, இஸ்லாமியர்கள் தொழ செய்வது போன்ற தோற்றம் இருந்தது.


அதை வைத்து பாகிஸ்தான் ஊடகங்கள் முகமது ஷமி தொழ செய்ய முயன்றார். ஆனால், அப்படி செய்தால் வரும் பின்விளைவுகளை எண்ணி அவர் அதை தவிர்த்து விட்டார் என கூறி இருந்தன. அதற்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முகமது ஷமி கடும் பதிலடி கொடுத்துள்ளார்.


முகமது ஷமி கூறிய பதில் - "நான் தொழ வேண்டும் என்றால் யார் அதை தடுக்க முடியும்? மற்ற மதத்தை சேர்ந்தவர்களை நான் தடுக்க மாட்டேன். அதே போல, அவர்களும் என்னை தடுக்க மாட்டார்கள். நான் அதை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை செய்வேன். அதில் என்ன பிரச்சனை உள்ளது? நான் ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு இந்தியர்என்பதில் பெருமை கொள்கிறேன். அதில் ஏதாவது பிரச்சனை என்றால் நான் இந்தியாவிலேயே இருந்திருக்க மாட்டேன். நான் தொழ செய்ய வேறு ஒருவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றால் நான் இந்தியாவை விட்டே வெளியேறி விடுவேன்" எனக் கூறி இருக்கிறார்.

No comments

Powered by Blogger.